1500 கிலோ தங்கத்தகடுகள்;10,008 திருவிளக்கு  வேலூர் தங்கக் கோயில் பத்தி தெரியுமா?

தங்கக் கோயிலின் வெளிப்பிரகாரம் வானிலிருந்து பார்க்கும்போது பெருமாளின் சுதர்சன சக்கரத்தில் இருக்கும் நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டிருக்கும்

அம்மன் எதிரே 27 அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன 10 அடுக்கு கொண்ட ஆயிரம் திரிகள் ஏற்றக்கூடிய விளக்கு உள்ளது

ஸ்ரீபுரத்தில் அருள்புரியும் சீனிவாச பெருமாளுக்கு ஸ்ரீபுரசீனிவாசர் என்ற திருநாமம் சூட்டப்பட்டுள்ளது

ஸ்ரீ என்றால் மகாலட்சுமி, புரம் என்றால் வாழும் இடம் மகாலட்சுமி வாழும் இடம்தான் ஸ்ரீபுரம்

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

நாராயணி தேவிக்கு தங்கத்தாலான கோயிலைக் கட்டும் விருப்பம் மேலிட்டு 1,500 கிலோ தங்கத்தைப் பயன்படுத்தி கடந்த 2007-ம் ஆண்டு இந்தக் கோயில் கட்டி முடிக்கப்பட்டது

இந்த கோயிலில் உலகின் மிகப் பெரிய வீணையும், 10,008 திருவிளக்கும் உள்ளன

மண்டபத்தின் பின்னால் மனிதனின் 18 வகையான குணங்களைத் தாண்டி இறைவனிடம் செல்வதை உணர்த்தும் வகையில் 18 நுழைவு வாயில்கள் உள்ளன

16 கால்களைக் கொண்ட ஸ்ரீசகஸ்ரதீப மண்டபம், 45 அடி உயரம் கொண்ட ஸ்ரீமகள் நீர்வீழ்ச்சி, திறந்தவெளி கலையரங்கம், புல்வெளி, நீரூற்றுகள், பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன

தங்கக் கோயிலைச் சுற்றி 10 அடி அகலத்துக்குத் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. கோயிலுக்குள் நுழைந்தவுடன் ஒரு தனி மண்டபமும், அதன் எதிரே செயற்கை நீரூற்றுக்களும் உள்ளன

நவீன விளக்குகள், பழங்கால மாட கல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்-ளன, இவை இரவு நேரத்தில் கோயிலைப் பகல் போல மாற்றுகின்றன