'16 கால் மண்டபம்; கபாலி தீர்த்தம்’ - மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சுவாரஸ்யங்கள்!

சிவனின் பெயர் கபாலீஸ்வரர். கபாலி என்றும் உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் அழைக்கப்படுகி-றது. நாற்புறமும் மாடவீதிகள், அழகிய கோபுரங்கள், திருக்குளமும் உள்ளது.

பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோயில் அமைந்துள்ளப் பகுதியும் மயிலாப்பூர் என வழங்குவதாகவும் கூறப்படுகிறது.

கோயிலின் மேற்கு வாசலின் முன்புறம் நீராழி மண்டபதோடு கூடிய பெரிய திருக்குளம் உள்ளது. இதற்கு கபாலி தீர்த்தம் என்ற பெயர் உள்ளது.

கபாலீஸ்வரர் கோயிலில் சிவலிங்க திருமேனியோடு மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார் சிவபெருமான். கபாலீசுவரர் சந்நிதிக்கு வலப்புறத்தில் தெற்கு நோக்கிய இடத்தில் கற்பகவல்லி தாய் அருள்பாலிக்கிறார்.

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மயிலாப்பூர் கோயில் திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் அழைக்கப்படுகிறது.

மயில் உருவில் இருந்த பார்வதி பெண் உருவத்திற்கு மாறினார். இந்த தவத்தின் பலனாக அந்த இடத்திற்கு மயிலை என்று பெயர் வந்ததாக வரலாறு உள்ளது.

இங்கு இருக்கும் சிவனை திருஞானசம்பந்தர், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், அருணகிரிநாதர் ஆகியோர் பாடி மகிழ்ந்துள்ளனர்.

பிரகாரத்தின் நடுவில் 16 கால் நவராத்திரி மண்டபமும், நால்வர் மண்டபமும் உள்ளது, ஊஞ்சல் உற்சவத்திற்காக நான்கு கால் மண்டபம் அமைந்திருக்கிறது.

கபாலீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக கொண்டாடப் பட்டு வருகிறது

தமிழ் கல்வெட்டுக்களில் ஒன்றில் கூத்தாடு தேவர் (நடராஜர்) சன்னிதியில் தீபம் வைப்பதற்குச் செய்த தானமும், மற்றொன்றில் முதல் இராஜராஜன் மெய்க்கீர்த்தியாகிய "திருமகள்போல" என்ற தொடக்கமும், மூன்றாவதில் பூம்பாவை என்ற திருப்பெயரும் குறிக்கப்பட்டுள்ளன.