Sports Movies: தமிழின் ஸ்போர்ட்ஸ் படங்கள்... இதையெல்லாம் பார்த்திருக்கீங்களா?

பிகில் - பெண்கள் கால்பந்தாட்ட போட்டியை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டது. ஆனால், சரியாக கால்பந்தாட்ட போட்டியை படம் பிரதிபலிக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. வழக்கமான விஜய் படமாகவே இருந்தது. மற்றப்படி, சிங்கப்பெண்ணே... சிங்கப்பெண்ணே எல்லாம் வேற லெவல்.

சார்பட்டா பரம்பரை - One of the finest Boxing படம் என சார்பட்டா பரம்பரையைக் குறிப்பிடலாம். வடசென்னை மக்கள் மத்தியில் இருந்த பாக்ஸிங் கலாசாரத்தை கச்சிதமாக இப்படம் பிரதிபலித்தது.

எதிர்நீச்சல் - ஒலிம்பிக் ஓட்டப்பந்தயம் தேர்வில் நடக்கும் மோசடிகளைக் குறிப்பிட்டு பேசிய திரைப்படம். அதேநேரம் கமர்ஷியலாகவும் காமெடியாகவும் படத்தை அணுகியிருப்பார்கள்.  

கனா - பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். ஆண்கள் கிரிக்கெட் பற்றி மட்டுமே பேச்சுகள் இருந்த நிலையில், பெண்கள் கிரிக்கெட்டைப் பற்றியும் விவாதங்களை எழுப்ப இந்த திரைப்படம் முயன்றது. முயற்சியில் ஜெயித்தது.

இறுதி சுற்று - பெண்கள் பாக்ஸிங்கில் முன்னேற படும் கஷ்டம், அதில் இருக்கும் அரசியல் ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். மிஸ் பண்ணவங்க கண்டிப்பா பாருங்க.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

ஜடா - கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம், ஜடா. பேய், வடசென்னை தகராறு என படம் தாறுமாறாக ஓடியதால் இதனை முழுமையாக ஸ்போர்ட்ஸ் படமாக ஏற்றுக்கொள்வதில் சிக்கல் இருக்கிறது.

தோனி - இன்றைக்கு கிரிக்கெட், கிரிக்கெட் என ஓடும் நடத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சிறுவனன் வாழ்க்கை என தோனி திரைப்படத்தைக் குறிப்பிடலாம். மாணவர்களுக்கு என்ன வருமோ அதை மேம்படுத்துவதற்கான கல்வி நம்மிடம் இருக்கிறதா? என்ற கேள்வியை மையமாக வைத்தும் படம் நகரும்.

ஜீவா - கிரிக்கெட் உலகில் நடக்கும் அரசியலை மிகவும் தெளிவாக சுட்டிக்காட்டிய படங்களில் ஜீவாவும் ஒன்று.

நட்பே துணை - சாதாரண கமர்ஷியல் மூவியில் கொஞ்சம் ஹாக்கியையும் ஹிப்ஹாப் தமிழா வசனங்களையும் தெளித்தால் நட்பே துணை ஸ்போர்ட்ஸ் மூவி ரெடி.

சென்னை 28 (1 and 2) - `எங்க ஏரியா உள்ள வராத’ - செம பைலைன்ல?! சென்னை 28 1 ஆகட்டும், 2 ஆகட்டும் லோக்கல் லெவலில் விளையாடும் கிரிக்கெட்டை அப்படியே திரையில் பிரதிபலித்த படம். எப்பவுமே சென்னை 28 டீம் கெத்துதான்.

பூலோகம் - பாக்ஸிங்கை மையமாக வைத்து நடக்கும் அரசியலை கூர்மையான வசனங்கள் வழியாகவும் அழுத்தமான காட்சிகள் வழியாகவும் கூறிய திரைப்படம் பூலோகம்.

எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி - கமர்ஷியலான பாக்ஸிங் படம். அம்மா செண்டிமெண்ட், அப்பா செண்டிமெண்ட் எல்லாம் கலந்த கலவையாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கும்.

வெண்ணிலா கபடிக்குழு - உள்ளூர் லெவலில் நடக்கும் கபடிப் போட்டிகளைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கை சூழலையும் அடிப்படையாக வைத்து வெண்ணிலா கபடிக்குழு எடுக்கப்பட்டிருக்கும்.

கென்னடி கிளப் - வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா என வெற்றிபெற்ற ஸ்போர்ட்ஸ் திரைப்படங்களைக் கொடுத்த சுசீந்திரன் பெண்களுக்கான கபடிப் போட்டியை மையமாக வைத்து கென்னடி கிளப் படத்தை எடுத்திருப்பார்.

கில்லி - மாஸ் கலந்த மசாலா திரைப்படம் கில்லி. விஜய் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட். கபடி ஒவ்வொரு போட்டியும் சும்மா வேற லெவல்ல இருக்கும். ஆனால், ஒரு டவுட்... எப்படி செமி ஃபைனல்ல தோத்துட்டு ஃபைனலுக்கு போனாங்க?

ஈட்டி - இந்தக் கதையில் ஹீரோ ஓட்டப்பந்தய வீரர் என்பதும் ஒருபகுதி. வித்தியாசமான நோய், காதல், கள்ள நோட்டு கும்பல் என பல திசைகளில் கதை பயணித்தாலும் அதர்வா அதனை சிறப்பாகவே கையாண்டிருப்பார்.

மான் கராத்தே - இந்த லிஸ்டில் இதை சேர்க்கணுமா? வேணாமா?னு யோசிச்சு... சரி சேர்க்கலாம்னு சேர்த்துட்டோம். மற்றபடி இது ஒரு நல்ல எண்டர்டெயின்மெண்ட், கமர்ஷியல், தட் ஹீரோயிஸ திரைப்படம். அவ்வளவுதான்!