சிறை என்று அடையாளப்படுத்தப்பட்ட அந்த காம்பவுண்டில் கால்பந்து மைதானம், பொம்மை அருங்காட்சியகம், மதுபானக்கூடம் என பல்வேறு வசதிகள் இருந்ததால், ஹோட்டல் எஸ்கோபர் அல்லது மெடலின் கிளப் என்றும் அழைக்கப்பட்டது. இதுகுறித்த தகவல்கள் ஊடகங்களில் கசிந்த நிலையில், 1992 ஜூலையில் அவரை சாதாரண சிறைக்கு மாற்ற கொலம்பிய அரசு முயற்சித்தது. ஆனால், இதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட பாப்லோ, 1992 ஜூலை 22-ல் லா கதீட்ரல் வளாகத்தில் இருந்து தப்பினார்.