இந்த கிளப்பிற்கு மதுரையிலும் அதைச் சுற்றியுள்ள பல ஊர்களில் காமெடி நிகழ்ச்சிகள் செய்வதுதான் வேலை. அதுமட்டுமில்லாமல் மீனாட்சி மிஷன் போன்ற பல மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளை சிரிக்க வைப்பதும் பல கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் சென்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு கலந்த காமெடி நாடகங்கள் செய்வதும் இந்த கிளப்பின் வேலை.