மும்பையைச் சேர்ந்த Aadit Palicha மற்றும் Kaivalya Vohra - இவங்க ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே ஒண்ணா வளர்ந்த திக் ஃபிரண்ட்ஸ். அமெரிக்காவுல இருக்க பிரபலமான ஸ்டான்போர்டு யுனிவர்சிட்டில கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க ரெண்டு பேருக்கும் வாய்ப்பு கிடைக்குது. அங்க போய் காலேஜ்ல சேர்ந்தாலும், பிஸினஸ் பண்ணனும்ங்கிற தங்களோட கனவு மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்க, ஒரு கட்டத்துல படிப்பை பாதியிலேயே விட்டுட்டு இந்தியா திரும்புறாங்க...
இந்தியா வந்ததும் பல ஸ்டார்ட் அப் ஐடியாக்களை யோசிச்சு டிரை பண்ணி பாக்குறாங்க. பள்ளிக்கூடம் போற பசங்க ஷேர் பண்ணி ஆப் மூலமா டிராவல் பண்ற ஐடியாவைப் பின்னணியா வைச்சு ஒரு ஸ்டார்ட் அப் தொடங்க, அது பிக் அப் ஆகவே இல்ல. தொடர்ந்து ரெண்டு பேரும் டிராவல் பண்ணிட்டு இருக்கப்ப கொரொனா லாக்-டவுன் வருது. அது இவங்க ரெண்டு பேரையும் பிரிச்சு வைக்குது.
அப்படி அவங்க ஆரம்பத்துல தொடங்குனது Kiranakart-னு ஒரு கம்பெனி. அது சூப்பர் மார்க்கெட்கள்ல இருந்து வாடிக்கையாளர்களுக்கு மளிகைப் பொருட்களை ஆர்டர் எடுத்து டெலிவரி பண்ற கம்பெனி. தொடக்கத்துல அது நல்லா போனாலும், எதிர்பார்த்த இலக்கை நோக்கிப் பயணிக்க இது சரியான வழி இல்லைனு யோசிச்ச அவங்க, அடுத்து எடுத்து வைச்சதுதான் மிகப்பெரிய மூவ்.
அதாவது, ஒவ்வொரு ஏரியாலயும் இருக்க சின்ன சின்ன கடைகள்தான் இந்த டார்க் ஸ்டோர்ஸ். அந்தக் கடைகளுக்கு கஸ்டமர்ஸ் நேர்ல போய் பொருட்களை வாங்க முடியாது. ஆனா, ஆன்லைன்ல ஆர்டர் பண்ணா, இந்தக் கடைகள்ல இருந்து டெலிவரி பண்ணுவாங்க. அதேபோல், டெக்னாலஜியை யூஸ் பண்ணி, ஒவ்வொரு ஏரியாவோட பேக்ரவுண்ட், அங்க இருக்க டிராஃபிக், டெலிவரி பண்ற டைம்னு கால்குலேட் பண்ணி, கடையையும், டெலிவரி எக்ஸிகியூட்டிவையும் ஒதுக்குறது இவங்களோட மாடல்.
இவங்களோட வளர்ச்சி முதலீட்டாளர்களையும் பாசிட்டிவா பார்க்க வைச்சிருக்கு. இதனாலேயே இந்த கம்பெனி, சமீபத்தில் சேர்த்த 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டையும் சேர்த்து மே 3, 2022 தேதியில் 900 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மொத்த மதிப்பீட்டைக் கொண்டதாக மதிப்பிடப்பட்டது. இது இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக ரூ.6,800 கோடி. மெர்சலா இருக்குல நம்பரைப் பார்க்குறப்ப..