கோடைகாலத்தில் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் சில உணவு வகைகள் நமது உடல் எடைக் குறைப்பிலும் பயன்படும்... அப்படியான சில உணவுகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
தர்பூசணி
தர்பூசணி பழத்தில் 92% நீர்ச்சத்துதான் நிறைந்திருக்கிறது. இது நமது உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதோடு, உடல் எடைக் குறைப்பிலும் முக்கியமான பங்காற்றுகிறது.
வெள்ளரிக்காய்
உடல் சூட்டைத் தணிக்கும் வெள்ளரிக்காய், குறைந்த அளவே கலோரிகள் கொண்டது. இது உடல் எடைக் குறைப்பிலும் பயன்படுகிறது.
ஸ்ட்ராபெர்ரி
நமது உடலுக்குத் தேவையான வைட்டமின் சி செறிவாகக் கொண்டிருக்கும் ஸ்ட்ராபெர்ரி உடல் எடையைக் குறைப்பதிலும் பங்காற்றுகிறது.
தக்காளி
சூப், சலாட் அல்லது சல்ஸா என எந்தவகையில் எடுத்துக் கொண்டாலும், இதிலிருக்கும் ஆன்டி-ஆக்ஸிடெண்டுகள் நமது உடலுக்கு பெரிய அளவில் நன்மை புரிகின்றன.
பயறு வகைகள்
புரதச் சத்து நிறைந்த பயறு வகைகள் உடல் எடைக் குறைப்புக்கு உற்ற தோழன்.
மாதுளை
மாதுளையில் நிறைந்திருக்கும் சத்துகள் உடலில் இருக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதிலும் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருப்பதிலும் சிறப்பாகச் செயலாற்றுகிறது.
கீரை வகைகள்
வைட்டமின் ஏ மற்றும் சி சத்துகள் நிறைந்து காணப்படும் கீரை வகைகள் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களின் மெனுவில் தவறாமல் இடம்பிடிக்கும் உணவு.
அன்னாசிப் பழம்
செரிமானப் பிரச்னையில் இருந்து காக்கும் bromelain, அன்னாசிப் பழத்தில் செறிந்து காணப்படுகிறது. இதனால், பல்வேறு வகையிலும் நம் உடல்நலனைப் பேணுவதில் அன்னாசி முக்கியமான பங்காற்றுகிறது.
சுரைக்காய்
நீர்ச்சத்து நிறைவாய் இருக்கும் சுரைக்காய் கலோரி அளவிலும் கொழுப்புச் சத்து அளவிலும் மிகமிகக் குறைவாய் கொண்டிருப்பது.