முன்னாள் விக்கெட் கீப்பரான கிரண் மோரேவின் கிரிக்கெட் கிளப்பில் சேர்ந்தபோது ஹர்திக் பாண்டியாவின் வயது 5.
02
ஆரம்பத்தில் லெக் ஸ்பின்னராக இருந்த பாண்டியா, கிளப் டீமில் ஒரு ஃபாஸ்ட் பௌலர் குறைந்த நிலையில் வேகப்பந்து வீச்சாளர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
03
சிறுவயதிலேயே மேகியை ரொம்பவே ரசித்து சாப்பிடுவார்களாம், பாண்டியா சகோதரர்கள். இதனால், இவர்களை மேகி பிரதர்ஸ் என்கிற அடைமொழியில் நண்பர்கள் அழைத்திருக்கிறார்கள்.
04
உள்ளூர் தொடரான சையது முஸ்டாக் அலி சீரிஸில் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 39 ரன்கள் அடித்த மாஸ் ரெக்கார்ட் ஹர்திக் பாண்டியா வசமிருக்கிறது.
சர்வதேச டி20 மேட்ச் ஒன்றில் 4 விக்கெட்டுகள் மற்றும் 30 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே இந்தியர் ஹர்திக்தான். 2018-ல் இங்கிலாந்துக்கு எதிரான மேட்சில் அவர் இந்த சாதனையைப் படைத்தார்.
06
'Time Is Money', 'Never Give Up' உள்பட 4 டாட்டுகளைத் தனது உடலில் குத்தியிருக்கிறார்.
07
2020 ஜனவரி முதல் தேதியில் சைபீரிய நடிகையும் டான்ஸருமான நடாஷாவுடன் நிச்சயதார்த்தம் ஆனது. இவர்களின் முதல் குழந்தைக்கு அகஸ்டியா என்று பெயரிட்டிருக்கிறார்கள்.
08
2015 ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்காக அறிமுகமானார் பாண்டியா. அவரது கரியர் கிராஃப் உச்சத்துக்குச் செல்ல ஐபிஎல் முக்கியமான காரணமாக அமைந்தது.
2021 ஐபிஎல் சீசனில் குஜராத் டீம் கேப்டனாக பாண்டியா, தான் தலைமையேற்ற முதல் சீசனிலேயே சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
10
ஐசிசி டி20 உலகக்கோப்பை மேட்சில் வங்கதேசத்தின் வெற்றிக்கு 3 பந்துகளில் 2 ரன்கள் தேவை என்கிற நிலையில், ஹர்திக் பாண்டியா 3 பந்துகளிலுமே விக்கெட் எடுக்க, இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.