`செப்டம்பர் 25 - அக்டோபர் 15...!' - 21 நாட்கள் போக்குகாட்டிய T23 புலி #Timeline

நீலகிரி, கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டி23 என்று பெயரிடப்பட்ட புலி ஒன்று மனிதர்களையும் கால்நடைகளையும் வேட்டையாடி வந்ததாக தகவல் பரவியது.

புலியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

மக்களின் போராட்டத்தையடுத்து வனத்துறையினர் செப்டம்பர் 24-ம் தேதி முதல் புலியைப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினர்.

வனத்துறை அதிகாரிகளிடம் சிக்காமல் போக்குக் காட்டி வந்த புலியை அக்டோபர் 1-ம் தேதி முதன்மை வன அதிகாரி சேகர் குமார் நீரஜ் சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டார்.

டி23 புலியை சுட்டுக்கொல்ல வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.

டி23 புலியைப் பிடிக்க அக்டோபர் 3-ம் தேதி கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டன. அக்டோபர் 4-ம் தேதி மோப்ப நாய்கள் கொண்டுவரப்பட்டன. அதுமட்டுமல்லாது ட்ரோன்களும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டன.

புலியை தேடும் பணியில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

கால்நடை மருத்துவர் குழுவால் தடுப்பூசி செலுத்தியும் தப்பித்துச் சென்ற புலிக்கு நேற்று இரண்டு முறை தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்தநிலையில், இன்று (அக்டோபர் 15) அதிகாலை மயக்கமடைந்த நிலையில் உயிருடன் பிடித்துள்ளனர்.

இயக்குநர் மணிவண்ணனின் முதல் படம்… `கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தை 80ஸ் கிட்ஸ் ஏன் கொண்டாடினார்கள்?!