ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை... மேடையில் உணர்ச்சிவசப்பட்ட கோலிவுட் பிரபலங்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பலரும் தங்களை அறிந்தோ, அறியாமலோ மேடையில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அவற்றில் சில சம்பவங்கள் இங்கே...

ரஜினி - தர்பார் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியதை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. தன்னுடைய ஆரம்பகால திரை வாழ்க்கையில் அவர்பட்ட அவமானங்களைக் குறிப்பிட்டு பேசினார். கண்ணீர் சிந்தாமல் அவர் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவர் ரசிகர்களுக்கு பெஸ்ட் மோட்டிவேஷனாக அமைந்தது.

சூர்யா - அகரம் அறக்கட்டளை சார்பில், 'வித்தியாசம்தான் அழகு', 'உலகம் பிறந்தது ந‌மக்காக' ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா சென்னை தியாகராயநகரில் ‌நடைபெற்றது. அப்போது மேடையில் மாணவி ஒருவரின் பேச்சைக்கேட்டு மேடையிலேயே சூர்யா கண்ணீர் விட்டு அழுதார்.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

நயன்தாரா - பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தனது தந்தையை குறிப்பிட்டு பேசும்போது நயன்தாரா உணர்ச்சிவசப்பட்டு அழுதார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து, ரசிகர்கள் அவருக்கு சமூகவலைதளங்கள் வழியாக ஆறுதல் கூறினர்.

சிம்பு - நிறைய மேடைகளில் சிம்பு உணர்ச்சிவசப்பட்டு பேசி அழுதிருக்கிறார். ஆனால், குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அது கட்-அவுட் விஷயம் தொடர்பாக பேசியதுதான். எழுமின் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிட்டின்போது `கட் அவுட் வேண்டாம்’ என்று தனது ரசிகர் கட் அவுட் தொடர்பான பிரச்னையில் இறந்ததைக் குறிப்பிட்டு பேசி உணர்ச்சிவசப்பட்டார்.

சாய் தன்ஷிகா - விழித்திரு திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் சாய் தன்ஷிகா பேசும்போது டி.ராஜேந்தர் பெயரை குறிப்பிட மறந்துவிட்டார். இதனால், டி.ஆர் மேடையிலேயே தன்ஷிகாவை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கும் வகையில் பேசினார். மனமுடைந்த தன்ஷிகா மேடையிலேயே உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.

ஜெயம் ரவி - தனி ஒருவன் சக்ஸஸ் மீட்டின்போது மோகன்ராஜா மற்றும் ஜெயம் ரவி இரண்டு பேருமே தங்களுடைய கடந்தகாலங்களை குறிப்பிட்டு பேசி கண்ணீர்விட்டனர்.

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

சத்யராஜ் - காஷ்மீரில் எட்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மேடை ஒன்றில் பேசும்போது நடிகர் சத்யராஜ் கண்கலங்கி மௌன அஞ்சலி செலுத்தினார்.

பூர்ணா - சவரக்கத்தி இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை பூர்ணா, அந்த நிகழ்வில் தன்னுடைய திரைப்பயணம் குறித்துப் பேசி கண்கலங்கினார்.

விஜயகுமார் - உறியடி 2 இசை வெளியீட்டு விழாவில் பேசிய அப்படத்தின் இயக்குநரும் நடிகருமான விஜயகுமார், படத்தில் பணியாற்றிய பயணம் குறித்து பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.

சிவகார்த்திகேயன் - ரெமோ படம் வெளியான பின்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன், படத்திற்கு பிரச்னைகள் வந்ததைக் குறிப்பிட்டு பேசி அழுதார். இந்த சம்பவம் இணையத்தில் வைரலானது. அதுமட்டுமல்ல, விஜய் அவார்ட்ஸ் விழாவில் தனது தந்தையை மிஸ் செய்வதாக அவர் பேசியதும் குறிப்பிடத்தக்கது.