'என்னை கல்லால அடிக்காதீங்க. அதை வைச்சு நான் வீடு கட்டிடுவேன்' - வேறலெவல் தமிழ் டப்பிங் டயலாக்ஸ்!

என்னை கல்லால அடிக்காதீங்க. அதை வைச்சு நான் வீடு கட்டிடுவேன்.

டேய், வோல்டேஜ் இருக்குற வயசுல, சேட்டை கொஞ்சம் இருக்குறது ஓகேதான். ஆனால், அந்த சேட்டையே வாழ்க்கையோட ஓட்டை ஆயிடக்கூடாதுடா.

மழை அடிச்சா இடி இடிக்கும். நான் அடிச்சா பொறி பறக்கும்.

நான் யாருங்குறது ஒரு மிஸ்ட்ரி. கிரியேட் பண்ணப்போறது ஹிஸ்ட்ரி. நீங்கள்லாம் பார்க்கப்போறது என் விக்ட்ரி.

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

என்னை அடியோட அழிக்கிறதுக்கு எங்கிட்ட என்னடா இருக்கு மண்டப்பயல. ஒரு ஷர்ட், ஒரு பேண்ட், உள்ள ஒரு ஜாக்கி.

நான் யாரையாவது டார்கெட் பண்ணேன்னா. அவனுக்கு பெர்த் கன்ஃபார்ம் ஆன மாதிரிதான்.

நான் கூறுபோட ஆரம்பிச்சேன்னா... நரக வாசல்ல ஹவுஸ்ஃபுல் போர்டு போட ஆரம்பிச்சிருவாங்க.

நான் எவனையும் சீண்ட மாட்டேன். என்னை சீண்டிப் பார்க்கணும்னு நினைச்சா, அவனை எமலோகத்துக்கு அனுப்பாமல் விடமாட்டேன். இது மதுரைக் குத்துடா டேய்.

உனக்கு ஈகோ ரத்தத்துலதான் இருக்கும். எனக்கு என்னை சுத்தி Wifi மாதிரி இருக்கும்.