ஒரு சில படங்களில் நடிப்பதற்காக குறிப்பிட்ட சில நட்சத்திரங்களை முதலில் படக்குழு முடிவு செய்திருக்கும். ஆனால், ஒரு சில காரணங்களால் அவர்கள் மாற்றப்பட்டு, வேறு ஒருவர் நடித்திருப்பார். அப்படியான 9 படங்களைப் பற்றிதான் நாம பார்க்கப்போறோம்.

உன்னை நினைத்து படத்தில் விஜய் நடிப்பதாக முடிவு செய்யப்பட்ட போட்டோ ஷூட் வரை நடத்தப்பட்ட நிலையில், பின்னர் சூர்யா நடித்தார். 

உன்னை நினைத்து

1

இயக்குநர் பாலாவின் நான் கடவுள் படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தது நடிகர் அஜித்தான். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக ஆர்யா நடித்தார்.

நான் கடவுள்

2

ஷங்கரின் எந்திரன் படத்தில் முதலில் நடிப்பதாக இருந்த கமல்ஹாசன். ஆனால், பின்னர் ரஜினி உள்ளே வந்தார். 

எந்திரன்

3

கே.எஸ்.ரவிக்குமாரின் ஜக்குபாய் ரஜினியை மனதில் வைத்து எழுதப்பட்ட கதை. ஆனால், சரத்குமார் நடித்தார்.

ஜக்குபாய்

4

பம்பாய் படத்தில் நடிக்க மணிரத்னத்தின் முதல் சாய்ஸாக இருந்தது நடிகர் விக்ரம். ஆனால், அவர் தாடியை ஷேவ் பண்ண மறுக்கவே அரவிந்த்சாமி நடித்தார்.

பம்பாய்

5

அமீர் கானின் லால் சிங் சத்தா படத்தில் நாக சைதன்யா நடித்த கேரக்டரில் நடிக்க முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் விஜய் சேதுபதிதான்.

லால் சிங் சத்தா

6

இயக்குநர் கே.வி.ஆனந்தின் கோ படத்தின் ஹீரோவாக முதல் சாய்ஸில் இருந்தவர் நடிகர் சிலம்பரசன். ஆனால், ஹீரோயின் மாற்றப்பட்ட நிலையில் படத்தில் இருந்து அவர் வெளியேறினார்.

கோ

7

கௌதம் மேனனின் காக்க காக்க படத்தின் வில்லன் ரோலில் நடிக்க வேண்டியது சத்யராஜ். ஆனால், வில்லன் ரோல் வேண்டாம் என்று அவர் ஒதுங்கிவிட்டாராம்.

காக்க காக்க

8

பாலாவின் வணங்கான் படத்தில் நடித்துக் கொண்டிருந்த சூர்யா, ஒரு சில காரணங்களால் அந்தப் படத்தில் இருந்து விலகியிருக்கிறார். அவருக்குப் பதிலாக அருண் விஜய் நடிக்கலாம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

வணங்கான்

9