"செல்லம்மா முதல் அரபிக் குத்து வரை..." அனிருத் - ஜோனிடா காந்தி காம்போவின் வேற மாறி ஹிட் சாங்ஸ்!

தமிழ் சினிமாவில் எத்தனையோ சிங்கர் காம்போக்கள் பெரிய அளவுக்கு ஹிட் கொடுத்திருக்கிறார்கள். அந்த லிஸ்டின் ஹிட் காம்போவாக இணைந்திருக்கிறது அனிருத் - ஜோனிடா காந்தி காம்போ. இவர்கள் இருவரின் குரலில் ஒலித்த ஹிட் பாடல்கள் உங்களுக்காக..!

White Frame Corner
White Frame Corner

இறைவா (வேலைக்காரன்)

White Frame Corner
White Frame Corner

சிவகார்த்திகேயன் - நயன் கூட்டணியில் உருவான வேலைக்காரன் ஆல்பத்தின் முக்கியமான பாடல் `இறைவா’. வழக்கமான துள்ளல் தொனியை விட்டு பேஸ் வாய்ஸில் அனிருத் பாடிக்கொண்டிருக்க, மறுபுறம் மெலடியாய் ஒலித்துக் கொண்டிருக்கும் ஜோனிடாவின் குரல். இந்த காம்போவின் அதிரிபுதிரி ஹிட் லிஸ்டில் இடம்பிடித்தது இறைவா பாடல்.   

White Frame Corner
White Frame Corner

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

செல்லம்மா (டாக்டர்)

White Frame Corner
White Frame Corner

அரபிக் குத்து பாட்டு டீசரில் வரும் சிவகார்த்திகேயன் - நெல்சன் - அனிருத் ஐடியாவுக்கு பிள்ளையார் சுழி போட்டது இந்தப் பாடலே. டிக் டாக் தடை செய்யப்பட்ட நேரத்தில், அதையே தொடக்கமாகக் கொண்டு சிவகார்த்திகேயன் எழுதிய இந்த பெப்பி சாங், அனிருத் - ஜோனிடா குரலில் வேற மாறி ஹிட் அடித்தது. 

White Frame Corner
White Frame Corner

ஒரே ஒரு ஊரில் (கோலமாவு கோகிலா)

White Frame Corner
White Frame Corner

இயக்குநர் நெல்சனுக்கு மிகப்பெரிய அடையாளம் கொடுத்த கோலமாவு கோகிலா படத்தில் அனிருத் - ஜோனிடா இணைந்து பாடிய பாடல் இது. மெலடியாக மனதை வருடிய இந்தப் பாடலில் லிரிக் வீடியோவுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது. 

White Frame Corner
White Frame Corner

என் சண்டைக்காரி (சங்கத் தமிழன்)

White Frame Corner
White Frame Corner

அனிருத் இசையைத் தவிர வேறொரு இசையமைப்பாளருக்காக இந்த காம்போ பாடிய இந்தப் பாடலுக்கு மிகப்பெரிய ஃபேன் பேஸே இருக்கு. விவேக் - மெர்வின் இசையில் ஹீரோ - ஹீரோயின் இடையிலான ஊடலைத் தங்கள் குரல்வழியே மெலடி விருந்து படைத்திருப்பார்கள் அனிருத்தும் ஜோனிடாவும்..!

White Frame Corner
White Frame Corner

அரபிக் குத்து  (பீஸ்ட்)

White Frame Corner
White Frame Corner

இந்த காம்போவின் லேட்டஸ்ட் சென்சேஷன் அரபிக் குத்து பாடல். அரபு மொழியில் சில வார்த்தைகளை எடுத்துப் போட்டு சில பல ஜிப்ரிஷ் வார்த்தைகளோடு லிரிசிஸ்ட் சிவகார்த்திகேயன் எழுதியிருக்கும் இந்தப் பாடலுக்கு அனிருத் - ஜோனிடாவின் குரல் அவ்வளவு கச்சிதமாகப் பொருந்திப் போயிருக்கிறது என்றே சொல்லலாம்.

White Frame Corner
White Frame Corner