`ஆனந்த தாண்டவம்’ முதல் `சைத்தான்’ வரை... படங்களாக மாறிய சுஜாதாவின் நாவல்கள்!
தமிழ் திரையுலகில் முக்கியமான ஆளுமையாக வலம் வந்தவர், சுஜாதா. அவரது எழுத்தில் பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதேசமயம், அவரது நாவலையும் படங்களாக எடுத்துள்ளனர். அவ்வகையில், படங்களாக மாறிய சுஜாதாவின் நாவல்கள் இங்கே...
ஆனந்த தாண்டவம் (பிரிவோம் சந்திப்போம்)
சித்தார்த் வேணுகோபால், தமன்னா, ருக்மினி ஆகியோரது நடிப்பில் ஏ. ஆர். காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் 2009-ம் ஆண்டு வெளியான திரைப்படம், ஆனந்த தாண்டவம். பிரிவோம் சந்திப்போம் என்ற நாவலை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டது.
ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் இளையராஜா இசையில் 1978-ம் ஆண்டு வெளியான திரைப்படம், ப்ரியா. ப்ரியா, எனும் நாவலை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டது.
ரஜினிகாந்த், ஸ்ரீதே நடிப்பில் ஆர்.பட்டாபிராமன் இயக்கத்தில் இளையராஜா இசையில் 1977-ம் ஆண்டு வெளியான திரைப்படம், காயத்ரி. காயத்ரி, எனும் நாவலை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டது.
விக்ரம் (விக்ரம்)
கமல், சத்யராஜ், அம்பிகா நடிப்பில் இராஜசேகர் இயக்கத்தில் இளையராஜா இசையில் 1986-ம் ஆண்டு வெளியான திரைப்படம், விக்ரம். விக்ரம் எனும் நாவலை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டது.
சைத்தான் (ஆ)
விஜய் ஆண்டனி, அருந்ததி நடிப்பில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி இசையில் 2016-ம் ஆண்டு வெளியான திரைப்படம், சைத்தான். ஆ எனும் நாவலை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டது.
உங்க Favourite Celebrities பத்தின 1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!
பிரதாப் போத்தன், ஸ்ரீபிரியா நடிப்பில் ஜி.என்.ரங்கராஜன் இயக்கத்தில் இளையராஜா இசையில் 1981-ம் ஆண்டு வெளியான திரைப்படம், கரையெல்லாம் செண்பகப்பூ. கரையெல்லாம் செண்பகப்பூ எந்த நாவலை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டது.
144 (வசந்தகால குற்றங்கள்)
சிவா, அசோக் செல்வன், ஓவியா ஆகியோரது நடிப்பில் ஜி.மணிகண்டன் இயக்கத்தில் ஷான் ரோல்டன் இசையில் 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம், 144. வசந்தகால குற்றங்கள் நாவலை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டது.
சுஜாதாவின் வேறு எந்த நாவலை படமாக எடுத்தால் சூப்பரா இருக்கும்னு கமெண்ட் பண்ணுங்க!