தமிழகம் இன்று : திண்டுக்கல்லில் செஞ்சுரியை நெருங்கும் குண்டாஸ் டு கோவையில் மரங்களுக்குத் திருமணம் வரை -உள்ளூர் செய்திகள்

தமிழைக் கட்டாயமாக்க வழக்கு!

மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தாய்மொழி புறக்கணிக்கப்படுகிறது என்றும் அப்பள்ளிகளில் தமிழைக் கட்டாய பாடமாக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், ``தமிழ்வழியில் படிக்க விரும்பினால் அப்பள்ளிகளுக்கு ஏன் செல்ல வேண்டும்” என கேள்வி எழுப்பினர். தீர்ப்பையும் ஒத்திவைத்தனர்.

திருநம்பி, திருநங்கைகளுக்கு கல்வி உதவித்தொகை!

கோவையில் 2019-2020 கல்வியாண்டில், இளநிலை பட்டப்படிப்பில் முதலாமாண்டு சேர்ந்த ஒரு திருநம்பி மற்றும் ஒரு திருநங்கைக்கு, மாணவர் உதவித்தொகை திட்டத்தில், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு சவரன் தங்க பதக்கம் வழங்கப்பட இருக்கிறது. இந்தத் திட்டத்துக்கு தகுதி உடையவர்கள் வரும் 24-ம் தேதிக்குள் சமூக நலத்துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். சீக்கிரம்!

 திண்டுக்கல்லில் 99 பேர் மீது குண்டாஸ்!

மணல் திருட்டு, கொலை, கொள்ளை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையில் கைதானவர்கள், தொடர்ந்து அந்த தவறுகளை செய்யாமல் இருக்க குண்டர் சட்டம் போடப்படுகிறது. அவ்வகையில், திண்டுக்கல்லில் 2021 தொடக்கம் முதல் நவம்பர் 08 வரை சுமார் 99 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. ரைட்டு!

மழை நீரை அகற்ற மக்கள் எதிர்ப்பு!

விழுப்புரம், விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதி வீடுகளில் கனமழையால் தண்ணீர் புகுந்தது. பேரூராட்சி ஊழியர்கள் நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மக்கள் அதைத் தடுத்து நிறுத்தினர். மழைநீர் தேங்குவதற்கு நிரந்தர தீர்வு எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மக்கள் பணிகளைச் செய்ய அனுமதித்தனர். எப்போ நடவடிக்கை எடுப்பீங்க!

அம்மன் கோவில்பட்டியில் இவ்வளவு பிரச்னையா?

சிவகாசி அருகேயுள்ள அம்மன் கோவில்பட்டி ஊரில் மக்கள் பல்வேறு பிரச்னைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். அப்பகுதியில் கருவேல மரங்கள் வெட்டப்பட்டு சாலையில் போடப்பட்டுள்ளன. வீடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள மின்கம்பம் ஒன்று சேதமடைந்து, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. மகளிர் சுகாதார நிலையம் செயல்படாததால் திறந்தவெளி கழிப்பிடமாக உள்ளது. குடிநீர் பிரச்னையும் உள்ளது. அதிகாரிகள் கவனத்துக்கு!

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் வெற்றி!

காஞ்சிபுரம் அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்த தரணிஸ்ரீ, சாருலதா, கவிதா, சுவேதா, மதுமிதா ஆகிய மாணவர்களை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பாராட்டியுள்ளார். வாழ்த்துகள்!

அரச மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் திருமணம்!

கோவையில் 2019-2020 கல்வியாண்டில், இளநிலை பட்டப்படிப்பில் முதலாமாண்டு சேர்ந்த ஒரு திருநம்பி மற்றும் ஒரு திருநங்கைக்கு, மாணவர் உதவித்தொகை திட்டத்தில், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு சவரன் தங்க பதக்கம் வழங்கப்பட இருக்கிறது. இந்தத் திட்டத்துக்கு தகுதி உடையவர்கள் வரும் 24-ம் தேதிக்குள் சமூக நலத்துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். சீக்கிரம்!

அ முதல் ஃ வரை... தமிழ் எழுத்து மாலை!

திண்டுக்கல்லைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி நாகராஜன் கலைநயத்துடன் கூடிய பொருள்களை செய்து அசத்தி வருகிறார். அவ்வகையில், தற்போது அ முதல் ஃ வரையிலான எழுத்துகளை ஒரே மரத்தில் ஒட்டு வேலைப்பாடின்றி மாலையாகத் தயாரித்து வருகிறார். இதனை முதல்வர் ஸ்டாலினுக்கு பரிசாக வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குளத்தைக் கடந்து மயானத்துக்குச் செல்லும் அவலம்!

புதுக்கோட்டை, கூத்தங்குடியில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் 200 குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மக்கள் இறந்தால், உடலை எடுத்துச் செல்ல சாலை வசதி இல்லை. குளம் மற்றும் வயல்களைத் தாண்டி உடலை அப்பகுதி மக்கள் எடுத்துச் செல்கின்றனர். காலம் காலமாய் இந்த அவலம் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்கிறார்கள் மக்கள்!

வேலூரில் கைவிடப்பட்ட பூங்காக்கள்!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் வேலூரில் பல பூங்காக்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த பூங்காக்களில் பெரும்பாலானவை பராமரிப்பின்றி குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால், மக்கள் பூங்காக்களைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

2015 வெள்ளத்துக்குப் பிறகும் பாடம் கற்கவில்லையா… சென்னை மாநகராட்சிக்கு நீதிமன்றம் கேள்வி