காவு வாங்கும் குப்பைத் தொட்டிகள்!
அண்ணா நகர், ஷெனாய் நகர், கிழக்கு கிளப் சாலையில் மூன்று குப்பைத் தொட்டிகள் உள்ளன. தூய்மைப் பணியாளர்கள் இங்குள்ள குப்பைகளை எடுத்துவிட்டு குப்பைத் தொட்டிகளை சாலையின் நடுவே வைத்து செல்வதாகப் புகார் எழுந்திருக்கிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டுநர்கள் விபத்தில் சிக்குகின்றனர். மாநகராட்சியின் கவனத்துக்கு!
சந்தோஷத்தில் சிட்டுக்குருவிகள்!
மதுரை, உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி இயற்கை வள பாதுகாப்புக் குழு மாணவர்கள் சிட்டுக்குருவிகளுக்கு ஆண்டுதோறும் கூண்டுகள் வைப்பது வழக்கம். தற்போது, இந்தக் கூண்டுகள் இருக்கும் பகுதியில் சிட்டுக்குருவிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
சுவர்களே புத்தகம்!
ஈரோட்டில் உள்ள ஈ.கே.எம்.அப்துல் கனி மதரசா இஸ்லாமிய தொடக்க பள்ளியில், பள்ளி திறப்பதை முன்னிட்டு கட்டடம் முழுவதும் வண்ணப் படங்களை வரைந்து மாணவர்களை வரவேற்க நிர்வாகம் தயாராகியுள்ளது. சுவர் ஓவியங்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கும் வசதியினை ஏற்படுத்தியுள்ளனர். இதனால், மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கின்றனர். செம!
ரூ.100 போதும்!
காஞ்சிபுரம் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வி.பாஸ்கரன், 100 ரூபாய் செலவில், சில்வர் காகித கழிவுகளை வாங்கி வந்து, ஒரு ஏக்கர் பரப்புள்ள வயலைச் சுற்றிலும் தடுப்பு ஏற்படுத்தியிருக்கிறார். இரவு, பகல் லேசான வெளிச்சம், அசையும் சத்தத்தால் பன்றிகள் தோட்டத்துக்குள் வருவதில்லை என்கிறார். ம்ம்ம்!
ரயில் நிலைய ஊழியர்களுக்கு கொரோனா!
குடும்பத்துடன் ஓய்வெடுப்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 15-ம் தேதி ஊட்டிக்கு வந்தார். அவர், கடந்த 17-ம் தேதி ஊட்டியில் இருந்து குன்னூருக்கு மலை ரயிலில் பயணித்தார். அவர் பயணித்த அடுத்த நாளே, குன்னூர் ரயில் நிலையத்தின் பொறியியல் பிரிவில் பணிபுரியும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
கடையைப் பூட்டிய மதுப்பிரியர்!
விருத்தாசலம் அருகே ஏனாதிமேடு பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் கடனுக்கு மதுபானம் கேட்டு ஊழியர்களை கவியரசன் என்பவர் தொந்தரவு செய்திருக்கிறார். மதுபானம் கொடுக்க அவர்கள் மறுக்கவே, டாஸ்மாக் ஊழியர்களை கடையில் வைத்து கவியரசன் பூட்டியிருக்கிறார். இந்த விவகாரம் புகாராகவே, அவரை போலீஸார் கைது செய்தனர். இன்னும் என்னலாம் பண்ண போறாங்களோ!
சாலையை சீரமைத்த காவலர்கள்
விருத்தாசலம் அருகே ஏனாதிமேடு பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் கடனுக்கு மதுபானம் கேட்டு ஊழியர்களை கவியரசன் என்பவர் தொந்தரவு செய்திருக்கிறார். மதுபானம் கொடுக்க அவர்கள் மறுக்கவே, டாஸ்மாக் ஊழியர்களை கடையில் வைத்து கவியரசன் பூட்டியிருக்கிறார். இந்த விவகாரம் புகாராகவே, அவரை போலீஸார் கைது செய்தனர். இன்னும் என்னலாம் பண்ண போறாங்களோ!