தங்க துரை - தற்கொலை ஜோக்குகள்!

``மரமே இல்லாத காடு என்ன காடு தெரியுமா?”

``சிம் கார்டு”

``ஒருத்தன் என்ன பண்ணான்.. இதே மாதிரி ஒரு பெரிய வீடு.. அந்த வீட்டுக்கு பச்சைக் கலர் சட்டை போட்டுக்கிட்டு... வெள்ளைக்கலர் வேட்டி கட்டிக்கிட்டு... ஸ்ட்ரெயிட்டா வீட்ல போய்ட்டு கதவ தட்டு தட்டு தட்டுனு தட்டினான். ஏன்?”

``ஏன்னா அந்த வீட்டுல காலிங் பெல் இல்லை”.

``நான் எம்ப்ளாய்மென்ட்ல எழுதி போட்டேன். கால் லெட்டர் வந்துச்சு. ஆனால், நான் போலயே”. ஏன்?

``ஏன்னா, முழு லெட்டர் வரணுல்ல. கால் லெட்டர்தான் வந்துச்சு”.

``ஒரு பூனை சரியான பசில இருந்துச்சு. சாப்பிடலாம்னு போச்சு. அங்க பால் இருக்கு. மீன் இருக்கு. கருவாடு இருக்கு. பூனைக்கு எதுமேல கண்ணு இருக்கும்?” 

``எல்லா பூனைக்கும் மூக்கு மேலதான் கண்ணு இருக்கும்”

``ஐ லைனருக்கும் லிப்ஸ்டிக்கும் சண்டை வந்துச்சாம். யார் பெரியவங்கனு. கடைசில லிப்ஸ்டிக் ஜெயிச்சுச்சாம். ஏன்?”

 ``வாய்மையே வெல்லும்”

``ஒரு போலீஸ் திருடன ஓடி ஓடி புடிச்சு. ஜெயிலுக்கு கூட்டிட்டு வந்தாரு. அவனை உள்ள தள்றதுக்கு முன்னாடி தலைல ஃபுல்லா எண்ணெய் தேச்சாரு. ஏன்?” 

 ``ஏன்னா அவன் ஆயுள் தண்டனைக் கைதி”

``மைக்கேல் ஜாக்சன்... ஆடுவாரு, பாடுவாரு. ஆனால், உட்கார சொன்னா உட்கார மாட்டாரு. ஏன்?”

``ஏன்னா, அவருக்கு தமிழ் தெரியாது”