`அவர்தான் பெரியார்’ - 13 பொன்மொழிகள்!

“”

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.

- பெரியார்

“”

பக்தி என்பது தனிச் சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து.

- பெரியார்

“”

விதி என்பது மிதிக்கப்பட்டவர்களும், ஒடுக்கப்பட்டவர்களும் கொதித்து எழாதிருக்கச் செய்யப்பட்ட சதியாகும்.

- பெரியார்

“”

யார் சொல்லியிருந்தாலும், எங்குப் படித்திருந்தாலும், நானே சொன்னாலும், உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே.

- பெரியார்

“”

நான் சொல்வதை மறுப்பதற்கு உனக்கு உரிமையுண்டு. ஆனால், என்னைப் பேசாதே என்று கூறுவதற்கு உரிமையில்லை.

- பெரியார்

“”

இங்கு எந்த மொழியும் தானாக உருவாகிவிடவில்லை. மொழி என்பதே கற்பிதம்தான்.

- பெரியார்

“”

அடிமைகளை நம்பி ஆதிக்கம் கொள்வது முட்டாள்தனம்.

- பெரியார்

“”

தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும்.

- பெரியார்

“”

கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.

- பெரியார்

“”

ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

- பெரியார்

“”

மதம் மனிதனை மிருகமாக்கும், சாதி மனிதனைச் சாக்கடையாக்கும்.

- பெரியார்

“”

தேர்ந்தெடுக்கப்பட்டவன் அயோக்கியன் என்றால், தேர்ந்தெடுத்தவன் முட்டாள் என்று அர்த்தம்!

- பெரியார்

“”

பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.

- பெரியார்

‘நண்பன்’ கருணாநிதி, தி.மு.க. வேட்பாளர்… ‘இசை முரசு’ நாகூர் அனீபா வாழ்வின் 5 நெகிழ்ச்சிகள்!

Read More