`The Great Wall of India' - ராகுல் டிராவிட் பற்றிய 10 சுவாரஸ்ய தகவல்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக தற்போது பணியாற்றி வருபவர், ராகுல் டிராவிட். இந்திய அணியின் கேப்டனாகவும் சிறந்த பேட்ஸ்மேனாகவும் அவர் செய்த சாதனைகள் பல... அவரைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே...

ராகுல் டிராவிட்டின் தந்தை ஜாம் தொழிற்சாலையில் பணியாற்றினார். இதனால், ராகுல் டிராவிட்டுக்கு ஜாம்மி என்ற பட்டப்பெயர் உண்டு. இதைத் தவிர அவரது ரசிகர்கள், ‘The Wall’, ‘Mr. Dependable’ போன்ற பெயர்களிலும் அவரை அழைப்பர். பெங்களூரில் ஒரு உள்ளூர் கிரிக்கெட் போட்டி, `Jammy Cup’ என்ற பெயரில் நடத்தப்படுவதும் கவனிக்கத்தக்கது.

ராகுல் டிராவிட் ஆங்கிலம், இந்தி, கன்னடம் மற்றும் மராத்தி உள்ளிட்ட பல மொழிகளை சரளமாகப் பேசக்கூடியவர்.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

இந்த செய்தியை பலரும் நம்பமாட்டார்கள். புகழ்பெற்ற பத்திரிக்கை ஒன்று `sexiest sportsperson of India' என்ற சர்வேயை நடத்தியது. இதில் பெரும்பாலான மக்கள் ராகுல் டிராவிட்டுக்கு வாக்களித்தனர்.

ராகுல் டிராவிட்டின் வாழ்க்கை வரலாறு பற்றி இரண்டு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. ஒன்று, வேதம் ஜெய்சங்கர் எழுதிய, `Rahul Dravid A Biography'. மற்றொன்று, தேவேந்திர பிரபுதேசாய் எழுதிய, `The Nice Guy Who Finished First'.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக பந்துகளைச் சந்தித்தவர் என்ற பெருமை ராகுல் டிராவிட்டுக்கு உண்டு. அவர் சந்தித்த பந்துகளின் எண்ணிக்கை, 31,258.

2004-ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது, இந்திய அணி. அதில் ஒரு டெஸ்ட் போட்டியின்போது சச்சின் 194 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். இன்றுவரை, டிராவிட்டின் இந்த செயல் சுயநலமிக்கதாக இந்திய அணி ரசிகர்களால் விமர்சிக்கப்படுகிறது.

ராகுல் டிராவிட் கிரிக்கெட்டில் மட்டுமல்ல, ஹாக்கியிலும் கலக்கக்கூடியவர். ஆனால், கிரிக்கெட்டில் அவருக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவே... ஹாக்கி விளையாடுவதில் இருந்து விலகிச் சென்றார்.

தென்னாப்பிரிக்க மண்ணில் அந்த அணியை டெஸ்ட் போட்டியில் வீழ்த்திய முதல் இந்திய கேப்டன், ராகுல் டிராவிட்தான்.

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ராகுல் டிராவிட் நன்றாக விளையாடுவார். ஒரு நாள் போட்டுகளில் அவர் அவ்வளவாக விளையாட மாட்டார் என்ற விமர்சனம் அவர்மீது இருந்தது. இந்த விமர்சனத்தை 1999-ம் ஆண்டு நடந்த ஐசிசி உலகக்கோப்பை போட்டியின்போது மாற்றினார். அந்த உலகக்கோப்பையில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறவில்லை என்றாலும் டிராவிட், தனது முத்திரையைப் பதித்து விமர்சனங்களுக்கு ஒஅதிலடி கொடுத்தார்.

Children’s Movement for Civic Awareness, UNICEF, AIDS Awareness Campaign போன்றவற்றில் Active member ஆக பணியாற்றி வருகிறார்.

ராகுல் டிராவிட்டின் சாதனைகளில் உங்களது மனம் கவர்ந்த சாதனை எது என கமெண்டில் சொல்லுங்க!