* ஒவ்வொரு வருடமுமே ஆன்லைன் உணவு ஆர்டர் நிறுவனங்கள் வெளியிடும் லிஸ்டில் இந்தியர்கள் அதிகம் பேரால் ஆர்டர் செய்யப்பட்ட உணவு என்கிற வகையில் தவறாமல் முதலிடம் பிடிக்கும் உணவு பிரியாணி.

Scribbled Underline

* அந்த அளவுக்கு ஃபுட் லவ்வர்ஸால் கொண்டாடப்படும் பிரியாணியில் இருக்கும் வகைகள் பற்றிதான் நாம இப்போ பார்க்கப்போறோம்.

Scribbled Underline

கொல்கத்தா பிரியாணி

பேருக்கு ஏத்தபடியே கொல்கத்தாவின் பிரிபிரேஷனான இந்த பிரியாணி கொஞ்சம் காரமானது.

சிந்தி பிரியாணி

பாகிஸ்தானின் சிந்தி பகுதியின் ஃபேமஸ் தயாரிப்பு. இந்த பிரியாணியில் உருளைக்கிழங்குகளையும் சேர்ப்பார்கள்.

மீமோனி பிரியாணி

சிந்தி பிரியாணி போலவே உருளைக் கிழங்கு, பச்சை மிளகாய், வாசனைப் பொருட்களோடு செய்யப்படுவது. 

ஹைதராபாத் பிரியாணி

பிரியாணி வகைகளிலேயே ரொம்ப ஃபேமஸானது. Pakki மற்றும் Kacchi என இரண்டு வகைகளில் தயாரிக்கப்படும்.

மலபார் பிரியாணி

கேரளாவின் மலபார் பகுதிகளில் தயாரிக்கப்படும் ஃபிளேவர் இது. பச்சை மிளகாய், ஏலக்காய் உள்ளிட்டவைகளை பேஸ்ட் போல் செய்து பிரியாணி சமைப்பார்கள்.

தலசேரி பிரியாணி

கேரளாவின் இன்னொரு பிரபலமான டிஷ். வறுத்த முந்திரி, வெங்காயம் போன்றவை சேர்க்கப்படும்.

ஆம்பூர் பிரியாணி

சீரக சம்பா வகையிலான சிறிய வகை அரிசியில் தயாராவது. வேலூர் மாவட்டம் ஆம்பூரின் ஸ்பெஷாலிட்டி டிஷ் இது. 

திண்டுக்கல் பிரியாணி

திண்டுக்கல்லின் ஃபேவரைட் டிஷ்ஷான இந்த வகை பிரியாணி எலுமிச்சை மற்றும் தயிர் தூக்கலாகச் சேர்த்து உருவாக்கப்படுபவை.