தமிழ் சினிமாவில் தேனியை மையமாக வைத்து பல படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் சிறந்த 10 படங்களை இந்த லிஸ்டில் பார்க்கலாம்...
தென்மேற்குப் பருவக்காற்று - சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தென்மேற்குப் பருவக்காற்று. இந்தப் படத்தின் கதை தேனியை மையமாக வைத்தே நகரும்.
சண்டக்கோழி - தேனியில் பவர்ஃபுல்லான குடும்பம் ஹீரோவோடது. அந்த பவர்ஃபுல்லான குடும்பத்தை மையமாக வைத்து சண்டக்கோழி திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கும். விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் இந்த திரைப்படம் 2005-ம் ஆண்டு வெளியானது.
மேற்கு தொடர்ச்சி மலை - தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருந்து மலை மேல் உள்ள கிராமங்களுக்கு பொருட்களை சுமந்து செல்லும் தொழிலாளிகளின் வாழ்வியலை இந்த திரைப்படம் பதிவு செய்துள்ளது. லெனின் பாரதி இயக்கத்தில் 2018-ம் ஆண்டு இந்தத் திரைப்படம் வெளியானது.
விஸ்வாசம் - தந்தை - மகள் பாசத்தை மையமாக வைத்து 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம், விஸ்வாசம். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த திரைப்படத்தின் நாயகன் தூக்குதுரை, தேனி மாவட்டத்தைச் சார்ந்தவராக காட்டப்பட்டிருப்பார். பேரு தூக்குதுரை, ஊரு கொடுவிலார்பட்டினு டயலாக்லாம் பேசுவாரு. நியாபகம் வந்துச்சா?
வணக்கம் சென்னை - கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் மிர்ச்சி சிவா மற்றும் பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் வணக்கம் சென்னை. இந்த திரைப்படத்தில் கதாநாயகன் தேனியைச் சார்ந்தவராக காட்டப்படுவார்.
மைனா - பிரபு சாலமன் இயக்கத்தில் விதார்த், அமலா பால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்ற மைனா திரைப்படம் தேனிப் பகுதியைச் சுற்றி நடக்கும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
சென்னை 28 (பார்ட் 2) - கிரிக்கெட்டை மையமாக வைத்து நகரும் இந்தக் கதையில் ஜெய் தனது திருமணத்துக்காக தேனி அருகில் உள்ள கிராமத்துக்கு வருவதாக வெங்கட்பிரபு காட்சிப்படுத்தியிருப்பார். என்னதான் இருந்தாலும் பண்ணைபுரம் குடும்பம் இல்லையா? அந்த டச் இருக்கதானே செய்யும்.
பிதாமகன் - மறக்க முடியுமா இந்த திரைப்படத்தை? சூர்யா மற்றும் விக்ரம் நடிப்பில் பின்னியிருப்பார்கள். இந்த திரைப்படம் தேனி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளை மையமாக வைத்தே எடுக்கப்பட்டிருக்கும். பாலா இயக்கத்தில் 2003-ம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது.
அழகர்சாமியின் குதிரை - சுசீந்திரன் இயக்கத்தில் அப்புக்குட்டி மற்றும் சரண்யா மோகன் நடிப்பில் 2011-ம் ஆண்டு வெளியான திரைப்படம் அழகர்சாமியின் குதிரை. இந்தத் திரைப்படம் தேனியில் உள்ள மல்லையாபுரம் பகுதியை மையமாக வைத்தே எடுக்கப்பட்டிருக்கும்.
படைவீரன் - தனசேகரன் இயக்கத்தில் விஜய் சேசுதாஸ், அம்ரிதா மற்றும் பாரதிராஜா நடிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் படைவீரன். இந்தக் கதையும் தேனியை மையமாக வைத்தே எடுக்கப்பட்டிருக்கும்.