உக்ரைன் போர் - ரஷ்யாவுக்கு குட்பை சொன்ன நிறுவனங்கள் என்னென்ன?
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த சில வாரங்களாக உச்சக்கட்டமாக போர் நடைபெற்று வருகிறது. இதனால், உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவும் ரஷ்யாவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டில் தனது சேவையை நிறுத்தியுள்ளன. அந்த நிறுவனங்களின் பட்டியல் இங்கே...
ஆப்பிள் செல்ஃபோன்கள் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஆப்பிள் பே மற்றும் கூகுள் பே சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மாஸ்டர் மற்றும் விசா கார்டு நிறுவனங்கள் இனி சேவையை வழங்கப்போவதுல்லை என அறிவித்துள்ளது.
சேம்சங் நிறுவனமும் தனது ஏற்றுமதி சேவையை அந்நாட்டில் நிறுத்தியுள்ளது.
ரஷ்ய ஊடகங்கள் ஃபேஸ்புக் பக்கங்களில் விளம்பரம் செய்யவும் மானிடைஸ் செய்யவும் மெட்டா நிறுவனம் தடை விதித்துள்ளது. கூகுள் நிறுவனமும் இந்த சேவைக்கு தடை விதித்துள்ளது.
ரஷ்யா மீது நிறுவனங்கள் தொடுத்துள்ள இந்த நடவடிக்கையை நீங்க எப்படி பார்க்குறீங்கனு கமெண்ட் பண்ணுங்க!