`பார்த்தியா பிச்சைக்காரப்பயன்றான்... இவன் குபேரன் மச்சான்' - எம்.ஆர்.ராதாவின் வேறலெவல் #ThugLife மொமன்ட்ஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர், எம்.ஆர்.ராதா. பகுத்தறிவு உள்ளிட்ட சிந்தனைகளை மக்களுக்கு தன்னுடைய சினிமாவின் வழியாக கொண்டுபோய் சேர்த்தவர். அவர் திரையில் செய்த தரமான 10 தக் லைஃப் மொமன்ட்கள் இங்கே...

எம்.ஆர்.ராதா: ``யார் நீ?” ``சாமியாருங்க” எம்.ஆர்.ராதா: என்ன கிண்டல் பண்றியா? நான் உன்னை யாருனு கேட்டா... `சாமி யாரு?’னு என்னைய கேக்குறியா?

எம்.ஆர்.ராதா: ``மிஸ்டர் பிள்ளை, இந்த ஃபங்ஷனை நாளைக்கு நைட்டு வைச்சிக்கோ” ``இன்னைக்கு ராத்திரி 10 மணிக்கு மேல சந்திரன், குரு அவங்கவங்க இடத்துக்கு போறாங்களாம். அதனால, இன்னைக்கு ராத்திரியே வைச்சிக்கணும்” எம்.ஆர்.ராதா: ``ஏன் மிஸ்டர் பிள்ளை இப்படி செஞ்சா என்ன? சந்திரன், குரு இந்த ரெண்டு ஃபெல்லோவையும் கூப்பிட்டு நாளைக்கு லீவ் எடுத்துக்க சொல்லு. நான் சொன்னேன்னு சொல்லு அவனை”

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

எம்.ஆர்.ராதா: ``எதிர்க்கட்சிக்காரன் பார்லிமெண்ட்ல ஒருத்தன்கூட எதிர்த்து கேட்க மாட்றான். நாங்க யாரை நம்பி ஓட்டுப்போடுறது இனிமேல்?” ``எதிர்க்கட்சினா நீங்க எதை சொல்றீங்க?” எம்.ஆர்.ராதா: ``சர்கார் எவ்வளவு நல்லது செஞ்சாலும், அதை எதிர்த்துக்கிட்டு இருக்குறவன் பேரு எதிர்க்கட்சி”

எம்.ஆர்.ராதா: ``ஏன்டா சண்டை போடுற? கொடுத்தத வாங்கிட்டு போடா” ``சும்மா கிடடா பிச்சைக்காரப்பயலே” எம்.ஆர்.ராதா: ``பார்த்தியா பிச்சைக்காரப்பயன்றான்... இவன் குபேரன் மச்சான்”

எம்.ஆர்.ராதா: ``அம்மா இந்த நேரத்துல எனக்கு ஒரு கல்யாணம் வேற ஏற்பாடு” ``கல்யாணமா? உனக்கா? அம்மா செலக்‌ஷன்னா பொண்ணு பெரிய இடமாதான் இருக்கும்” எம்.ஆர்.ராதா: ``ம்ம்ம்... பொண்ணு பெரிய இடம்... 120 அடி உயரம்... போடா” 

``காசு என்னங்க பெரிய காசு! அது இன்னைக்கு வரும் நாளைக்கு போகும். மனுஷனுக்கு குணம்தாங்க பெருசு” எம்.ஆர்.ராதா: ``குணம் பெருசுன்றவன்... அப்புறம் ஏன்டா பணத்துக்கு பிச்சை எடுக்குற?”

எம்.ஆர்.ராதா: ``சொல்றவன் சொந்த வாழ்க்கையெல்லாம் கிளறிப்பார்க்காத. அவன் சொல்றதுல அறிவுக்கு பொருத்தமா இருந்தா நடங்க. இல்லைனா போங்கடா”

எம்.ஆர்.ராதா: ``ஆணாக மாறிய அழகம்மாளுக்கு மணமகள் தேவை. குட் குட் குட்... பிச்சிட்டா... ஜனங்களும் பத்திரிக்கையை பிச்சிடுவாங்க இன்னைக்கு”

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

எம்.ஆர்.ராதா: `தாயே... பசி... பசி...” ``யார்ரா அவன்” எம்.ஆர்.ராதா: ``யாரு ஆம்பளைங்களா? பொம்பளைங்க இல்லையா?” ``எதுக்குடா பொம்பளைங்கள தேடுற” எம்.ஆர்.ராதா: அவங்கதான் போடுவாங்க. நீங்கலாம் மைனர்கள் போடமாட்டீங்க”

``உனக்கு அறிவுன்றது எப்போ வரும்னு தெயலை” எம்.ஆர்.ராதா: ``எல்லாருக்கும் வந்தா எனக்கும் வரும்”

எம்.ஆர்.ராதாவின் தக் லைஃப் மொமன்டுகளில் உங்களோட ஃபேவரைட் எதுனு கமெண்ட் பண்ணுங்க்!