மதுரை வீரன்தானே... - `குக் வித் கோமாளி’ மதுரை முத்துவின் #ThugLife மொமண்ட்ஸ்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மதுரை முத்து கொடுத்த அசத்தல் கவுண்டர்கள் இங்கே...

மதுரை முத்து: ``இது வெஜ் ஆ... நான் வெஜ் ஆ..?’’ ரக்‌ஷன் :``இது வெஜ்ஜூ” மதுரை முத்து: ``இல்லை. நான் வெஜ். முட்டை கோஸ்ல!”

புகழ்: ``இது திணை வாழைப்பழ குழிப் பணியாரம்” மதுரை முத்து: ``ஏம்பா, குழிப்பணியாரத்துக்கு, எத்தனை அடி குழி தோண்டுனீங்க?”

மதுரை முத்து: ``காக்கா தன் குஞ்சை தூக்கிட்டு அடகு கடைக்கு போச்சாம்டா!” தங்கதுரை: ``ஏன்?” மதுரை முத்து: `காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுல!”

மணிமேகலை: ``என் சைக்கிள் எல்லாம் கொஞ்சம் தொடைச்சு வைச்சிருங்க.” மதுரை முத்து: ``ஏம்மா, தொடைக்கு வைச்சா... அப்புறம் காலுக்குலாம் என்ன வைக்கிறது?”

மதுரை முத்து: ``மீன் சாப்பிட்டுட்டே இருந்தான். இரண்டு பேருமே மண்டையை போட்டுட்டாங்க.” ரக்‌ஷன்: ``எப்படி” மதுரை முத்து: ``மீன் மண்டையை.”

தாமு: ``சர்க்கரை வந்து ஜாஸ்தியாவும் இல்லை. கம்மியாவும் இல்லை. ஆனால், எங்கயே ஒரு கசப்பு தட்டுது. எங்கனு தெரியலை” மதுரை முத்து: `ஸ்பூன்லயா இருக்கும்”

மணிமேகலை: ``வாழைப்பழம் எங்கனா இருக்கு?” மதுரை முத்து” ``வாழைக்காய்க்கு வெயிட் பண்ணோம்னா வாழைப்பழம் கிடைக்கும்.”

மதுரை முத்து: ``மிளகாப்பொடி எதுல செய்றாங்க?” சிவாங்கி: ``மிளகாய்ல” மதுரை முத்து: ``சீரகப்பொடி எதுல செய்றாங்க?” சிவாங்கி: ``சீரகத்துல” மதுரை முத்து: ``மூக்குப்பொடி எதுல செய்றாங்க?”

புகழ்: ``ஒருவரைப் பார்த்தவுடன் நெஞ்சைத் தொடுவதுபோல் இருக்க வேண்டும். அப்படி ஒரு வார்த்தை வேண்டும்” மதுரை முத்து: பனியன்

ரக்‌ஷன்: ``பணியாரத்தை சூஸ் பண்ணிட்டீங்களா புகழ்?” மதுரை முத்து: ``பணியாரத்தை எப்படி ஜூஸ் பண்ண முடியும். ஆரஞ்சு பழத்தைதான் ஜூஸ் பண்ண முடியும்.”

மதுரை முத்து கவுண்டர்களில் உங்களுக்குப் பிடித்தது எதுனு கமெண்டில் சொல்லுங்க!