TikTok முதல் CapCut வரை...  உலகின் டாப் 10 யூஸர்ஸ் கொண்ட மொபைல் ஆப்கள்!

TikTok

TikTok

வார்னர் முதல் ஜி.பி.முத்துவரை தமிழர்களின் மனதில் இடம்பிடிக்க இந்த ஆப்தான் முக்கிய காரணம். ஆனால், இந்தியாவில் இந்த ஆப்பை தடை பண்ணிட்டாங்க. இருந்தாலும் உலக அளவிலான செலிபிரிட்டிகள் இந்த ஆப்பில் தொடர்ந்து அமர்க்களம் செய்துதான் வருகின்றனர்.

Instagram 

Instagram 

ஃபேஸ்புக்குக்கு சொந்தமானதுதான் இந்த இன்ஸ்டாகிராம். டிக்டாக்கை தடை செய்த பின்பு இந்தியாவில் அதிக கவனத்தை இன்ஸ்டாகிராம் பெற்றுள்ளது. இப்போ இந்தியர்கள் ரீல்ஸ் பார்க்க இங்கேயே தவம் கிடக்குறாங்க. உலகளவிலும் பல செலிபிரிட்டிகள் இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டிவா இருக்காங்க.

Facebook 

Facebook 

நம்மளோட பெர்சனல் புகைப்படங்களில் இருந்து மீம்ஸ் வரைக்கும் இந்த ஆப்ல பதிவிடலாம். ஆனால், சொந்தக்காரங்களை ஃப்ரண்ட் லிஸ்டில் சேர்க்காமல் இருப்பது ஃபேஸ்புக்கில் வால்தனம் செய்பவர்களுக்கு நல்லது.

WhatsApp 

உலகளவில் ஸ்மார்ட்ஃபோன் உபயோகிக்கும் அனைவரும் பயன்படுத்தும் ஆப் என்றால் அது வாட்ஸ்அப்தான். இந்த ஆப் தொடர்ந்து அப்டேட்டுகளைக் கொடுத்து அசத்தி வருகிறது. ஆனால், எத்தனை குரூப்ல இருக்கோம்னு நமக்கே தெரியாது.

WhatsApp 

Telegram 

வாட்ஸ்அப்க்கு அடுத்தபடியாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் மெசேஜ் ஆப் டெலிகிராம்தான். இந்த ஆப்பில் ஃபைல்களை அனுப்ப ஃபார்மட் மற்றும் சைஸ் என எதுவும் பிரச்னை இல்லை. கொஞ்சம் நினைச்சு பாருங்க... எத்தனை திரைப்படங்கள், சீரீஸ், புத்தகங்கள், நியூஸ் பேப்பர்லாம் இங்க இருந்து டவுன்லோட் பண்ணியிருப்போம்.

Telegram 

Snapchat 

Snapchat 

Fun நிறைந்த ஆப் என்றால் அது ஸ்நாப்சாட்தான். ஃபில்டர்ஸ், பிட்மோஜி உள்ளிட்ட பலவகையான ஆப்ஷன்கள் இந்த ஆப்பில் உள்ளன. தொடர்ந்து அதிக மக்கள் பயன்படுத்திவரும் ஆப்பாக இது உள்ளது.

Facebook Messenger

Facebook Messenger

இந்த Messenger வழியாக உங்களது இன்ஸ்டாகிராம் நண்பர்களையும் தொடர்பு கொள்ள முடியும். டெக்ஸ்ட், ஆடியோ மற்றும் வீடியோ என அனைத்து ஃபார்மட்களிலும் மெசேஜ்களை இதில் அனுப்ப முடியும்.

Meesho 

Meesho 

மிகவும் பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் ஆப். மக்கள் மத்தியில் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த ஆப்பாக இது உள்ளது. எக்கச்சக்கமான ஆஃபர்களை எப்போதும் கொடுப்பாங்க. முடிஞ்சா ட்ரை பண்ணிப் பாருங்க.

Spotify 

Spotify 

இசைப்பிரியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஆப் இது. podcast-களும் தற்போது இதில் ஒலிபரப்பப்படுகின்றன. நமக்கு தேவையான ப்ளேலிஸ்டை இதில் உருவாக்கிக்கொள்ளலாம். சூப்பர்ல!

CapCut 

CapCut 

வீடியோ எடிட்டிங் ஆப்தான் இது. வீடியோ எடிட்டிங்கிற்கு தேவையான பலவகையான ஆப்ஷன்கள் இதில் உள்ளன. எடிட்டர்களின் ஃபேவரைட் எடிட்டிங் ஆப் பட்டியலில் இதற்கு இடம் உண்டு.

ரூ.10,000 முதல் கோடி ரூபாய் வரை… அதிரவைக்கும் ஆன்லைன் சூதாட்ட லக்கி ஸ்டார் – ஜெனிசிஸ் மோசடி!