சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது
சரி, சேது சமுத்திரத் திட்டம் பற்றி எப்போது முதல்முறையாகப் பேசப்பட்டது???அது கடந்து வந்த பாதை!
1967-ல் முதல்முதலில் தி.மு.க ஆட்சியைப் பிடித்தபோது, கருணாநிதிக்கு எழுதிய மடலில் அண்ணா இதைப்பற்றி குறிப்பிட்டார். திட்டத்தை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்று அவர் எழுதியிருந்தார்.
1860-ம் ஆண்டு இந்திய கடற்படையில் இருந்த ஏ.டி.டெய்லர்தான் இந்தத் திட்டம் பற்றி முதன்முறையாக சிந்தித்தவர்
சுதந்திரத்துக்குப் பிறகு பிரதமர் நேரு அமைத்த ராமசாமி முதலியார் திட்டக் குழு, இந்தத் திட்டத்துக்கு ரூ.9.98 கோடியில் திட்ட மதிப்பீட்டை சமர்ப்பித்தது.
அதன்பின்னர், 1983-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அமைத்த லட்சுமி நாராயணன் குழு, ரூ.282 கோடியில் திட்ட மதிப்பீடு அறிக்கையைத் தயாரித்தது.
அதன்பின்னர், 1983-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அமைத்த லட்சுமி நாராயணன் குழு, ரூ.282 கோடியில் திட்ட மதிப்பீடு அறிக்கையைத் தயாரித்தது.
திட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால், பாக் நீரிணைப்பு மற்றும் ராமர் பாலம் இருந்ததாக நம்பப்படும் பகுதிகளில் கப்பல் போக்குவரத்துக்காக ஆழமாகத் தோண்டுவது.
இதன்மூலம், இந்தப் பகுதியில் செல்லும் கப்பல்களின் வேகம் மற்றும் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். இதனால், இலங்கையைச் சுற்றிக்கொண்டு போகவேண்டிய தேவை இருக்காது.
நாட்டின் கிழக்கு - மேற்குக் கடற்கரைகள் இடையிலான தூரம் 424 நாட்டிகல் மைல் அளவு குறைவதோடு, பயண நேரமும் சுமார் 30 மணி நேரம் வரை குறையலாம் என்கிறார்கள்.
2005 ஜூலை 2-ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், இந்தத் திட்டத்துக்கான அடிக்கல்லை மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நாட்டி, தொடங்கி வைத்தார்.
2004-க்குப் பிறகு ரூ.247 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 50% பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் முட்டுக்கட்டை போட்டனர். இதனால், பணிகள் முடிக்கப்படவில்லை.