எங்க ஊரு சினிமா: காதலும் வீரமும் பேசிய... திருச்சியில் எடுக்கப்பட்ட 10 படங்கள்!

தமிழ் சினிமாவில் திருச்சியை மையமா வைத்து குறிப்பிட்ட சில திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால், பல காட்சிகளை திருச்சியில் படமாக்கியுள்ளனர். அவ்வகையில் திருச்சியில் எடுக்கப்பட்ட சில படங்களின் பட்டியல் இதோ...

திருடா திருடி - தனுஷ் நடிப்பில் சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் தினா இசையில் 2003-ம் ஆண்டு வெளியான திரைப்படம், `திருடா திருடி’. இந்தப் படத்தின் கதை தொடங்குவதே திருச்சியில்தான்.

பாஸ் (எ) பாஸ்கரன் - ஆர்யா நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் 2010-ம்  ஆண்டு வெளியான திரைப்படம், `பாஸ் (எ) பாஸ்கரன்’. பக்காவான காமெடி பேக்கேஜ் இந்தத் திரைப்படம்.

எங்கேயும் எப்போதும் - ஜெய், அஞ்சலி நடிப்பில் சரவணன் இயக்கத்தில் 2011-ம் ஆண்டு வெளியான திரைப்படம், `எங்கேயும் எப்போதும்’. காதல் உணர்வுகளை மிகவும் எளிமையாக வெளிப்படுத்திய படங்களில் இதுவும் ஒன்று.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

கேடி பில்லா கில்லாடி ரங்கா - சிவகார்த்திகேயன், விமல் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் 2013-ம் ஆண்டு வெளியான திரைப்படம் இது. காமெடி, காதல், குடும்ப செண்டிமெண்ட் ஆகியவற்றை தனக்கே உரிய பாணியில் பாண்டிராஜ் படமாக்கியிருப்பார்.

மலைக்கோட்டை - விஷால் நடிப்பில் பூபதி பாண்டியன் இயக்கத்தில் மணி ஷர்மா இசையில் 2007-ம் ஆண்டு வெளியான திரைப்படம், மலைக்கோட்டை. இந்தப் படத்தில் பெரும்பாலான காட்சிகள் திருச்சி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கும்.

நண்பேன்டா - உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஜெகதிஷ் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம், `நண்பேன்டா’. கொஞ்சம் மொக்கையான காமெடி படமாக இருந்தாலும் சில காட்சிகளை ரசிக்கலாம். இந்தப் படத்தின் சில காட்சிகளும் திருச்சி பகுதியில் எடுக்கப்பட்டிருக்கும்.

பட்டத்துயானை - விஷால் நடிப்பில் பூபதி பாண்டியன் இயக்கத்தில் தமன் இசையில் 2013-ம் ஆண்டு வெளியான திரைப்படம், `பட்டத்து யானை’. இந்தப் படத்தின் சில காட்சிகளும் திருச்சி பகுதியில் எடுக்கப்பட்டிருக்கும்.

பாண்டிய நாடு - விஷால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் இமான் இசையில் 2013-ம் ஆண்டு வெளியான திரைப்படம், `பாண்டிய நாடு’. பெரும்பான்மையான காட்சிகளும் கதையும் மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தாலும் சில காட்சிகள் திருச்சியிலும் எடுக்கப்பட்டுள்ளது.

ரன் - மாதவன் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் 2002-ம் ஆண்டு வெளியான திரப்படம், `ரன்’. மிகப்பெரிய ஹிட்டான் இந்தப் படத்தின் சில காட்சிகள் ஸ்ரீரங்கம் பகுதியில் படமாக்கப்பட்டிருக்கும்.

சத்ரியன் - விக்ரம் பிரபு நடிப்பில் பிரபாகரன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் 2017-ம் ஆண்டு  வெளிவந்த திரைப்படம், சத்ரியன். இந்தப் படத்தின் காட்சிகள் திருச்சியில் எடுக்கப்பட்டதுதான்.