ஹீரோயின் சினிமா: சிம்ரனால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம்.. 10 அசத்தல் கேரக்டர்கள்!

ப்ரியா – `கண்ணெதிரே தோன்றினாள்’ - அண்ணனுக்கும் காதலனுக்கும் இடையே சிக்கிக்கொண்டு தவிக்கும் ஒரு சராசரி இளம்பெண்ணின் பாத்திரத்திற்கு சிம்ரன் அவ்வளவு நியாயம் சேர்த்திருப்பார்.

இந்திரா திருச்செல்வன் – `கன்னத்தில் முத்தமிட்டால்’ -  படம் முழுக்க தான் வளர்த்த குழந்தையை பிரிந்துவிடப்போகிறோமோ எனும் பரிதவிப்புடன் நடித்த சிம்ரன் ப்ளாஷ்பேக் காட்சிகளில் மணிரத்னத்திற்கேயுரிய குறும்புத்தனத்திற்கும் பொருத்தமாக இருப்பார்.

ருக்கு –  `துள்ளாத மனமும் துள்ளும்’ - ஒரே படத்தில் கல்லூரிப் பெண் டூ கலெக்டர் வரை குணச்சித்திர வளைவு கொண்ட கேரக்டர் சிம்ரனுக்கு. அதுவும் முக்கால்வாசி படத்தில் பார்வையற்றவராகவும் நடித்து அசத்தியிருப்பார்.

ப்ரியா – `வாலி' - கனிவு, காதல், ஏமாற்றம், வருத்தம், கோபம், இயலாமை என அனைத்து உணர்ச்சிகளையும் நொடி வித்தியாசங்களில் மாற்றி மாற்றி வெளிப்படுத்தி அசத்தியிருப்பார் சிம்ரன்.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

பானு – `பார்த்தேன் ரசித்தேன்’ - தன் நண்பனின் காதலை, அவனுக்கேத் தெரியாமல் பிரிக்க நினைக்கும் பொசஸிவ்னெஸ்ஸும் வில்லத்தனமும் நிறைந்த ஒரு வித்தியாசமான ரோல் சிம்ரனுக்கு.

மாலினி கிருஷ்ணன் – ‘வாரணம் ஆயிரம்’ - ‘ஹாய் மாலினி’ என சூர்யா காதல் மொழியும்போது வெட்கப்படும் இளம் மாலினியாகட்டும், காலங்கள் கடந்தபிறகு தன் குழந்தைகளை அரவணைத்துச் செல்லும் மெச்சூர்டு ஃப்ரெண்ட்லி அம்மாவாகட்டும் என ஒரே படத்தில் அசத்த சிம்ரனால் மட்டும்தான் முடியும்.

லெட்சுமி – ‘ஏழுமலை’ - தன் கணவனை ஏமாற்றும் அவனது அண்ணன்கள், இந்த உண்மையை ஏற்க மறுக்கும் கணவன் என கிட்டத்தட்ட ‘வாலி’ பாணியிலான இந்தக் கதையில் சிம்ரன் ஜஸ்ட் லைக் தட் ஸ்கோர் செய்திருப்பார்.

வீரலெட்சுமி – ‘கோவில்பட்டி வீரலெட்சுமி’ - தலித் ஒடுக்குமுறைகளைப் பற்றி அப்போதே பேசிய ஒரு சில படங்களில் இந்தப் படமும் ஒன்று. சக்ஸஸ்ஃபுல் கியூட் ஹீரோயினாக சிம்ரன் வலம் வந்துகொண்டிருந்த நேரத்தில் தடாலடியான இந்த வேடத்தில் அவர் நடிக்கிறார் என்றதுமே எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியது.

ப்ரியா – ‘ப்ரியமானவளே’ - ஒரு வருஷம் அக்ரீமெண்ட் கல்யாணம் என்றதும் கொந்தளிப்பது தொடங்கி, கல்யாணத்திற்குப் பிறகு அந்த அக்ரீமெண்ட் முடியக்கூடாது என ஏங்குவது, அக்ரீமெண்ட் காலம் முடிந்ததும் கணவன்மீது வெறுப்பை உமிழ்வது என சகல ஆங்கிளிலும் அசத்தியிருப்பார் சிம்ரன்.

ஜானகி – ‘பம்மல் கே சம்பந்தம்’ - சிம்ரனுக்கு காமெடியும் நன்கு வரும் என அவர் நிரூபித்த படம் இது. காமெடியில் கலக்கும் கமலுக்கு நிகராக இந்தப் படத்தில், சிம்ரனும் வாட்சை வயிற்றுக்குள் வைத்து ஆபரேசன் செய்துவிட்ட டாக்டர் வேடத்தில் பட்டையைக் கிளப்பியிருப்பார்.