கீதா ராணி (ராட்சசி)
வாழ்க்கை ஒரு அழகான பயணம் அப்டினு வச்சிக்கலாம். அதோட எண்ட்ல ஒரு மிகப்பெரிய தங்கமும் வைரமும் குவிஞ்ச புதையல் நமக்காக காத்திட்டு இருக்கும். கண்ணுக்குத் தெரியாது. ஆனால், அதை நோக்கி நாம போய்கிட்டே இருப்போம். போற வழியில சின்ன சின்ன துண்டா தங்கம் சிதறி கிடக்கும். நாம அதைப் பார்த்துட்டு புதையல் கிடைச்சிடுச்சுனு நினைச்சோம்னு வைங்க. பயணம் அதோட ஸ்டாப். யார் அதைக் கண்டுக்காம தொடர்ந்து பயணிக்கிறாங்களோ... அவங்களுக்குதான் புதையல்.