`முதலிடம் டிக்டாக்... ஆனால், வாட்ஸ் அப்-க்கு?!’ - 2021-ன் டாப் 10 வெப்சைட்கள்!

Cloudflare Radar என்ற நிறுவனம் இந்த ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட டொமைன்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியல் இதோ...

Tik Tok - உலக அளவில் அதிகமானோரால் விசிட்டடிக்கப்பட்ட வெப்சைட்களில் டிக் டாக் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த Domain ஏழாவது இடத்தில் இருந்தது. ஆனால், இந்தியாவில் இந்த டொமைன் தடை செய்யப்பட்டுள்ளது. டிக் டாக் ஃபேன்ஸ்க்கு சத்திய சோதனை.

Google - கூகுள்க்கு தெரியாத விஷயங்கள் இல்லை. நம்ம சைட் அடிக்கிற பொன்னுங்க நம்பர்கூட கூகுள்க்கு தெரியும்னு தேடுவோம். அப்படிப்பட்ட கூகுள் டொமைன் இரண்டாவது இடத்துல இருக்கு.

Facebook - கடைசியா உங்க நண்பனை எப்போ டேக் பண்ணிங்க.. நியாபகம் இருக்கா? சரி அதை விடுங்க. இந்த லிஸ்டில் ஃபேஸ்புக் டொமைன் மூன்றாவது இடத்தில் இருக்கு. இதைக் கொண்டாட உங்க நண்பனை டேக் பண்ணுங்க.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

Microsoft - மைக்ரோசாஃப்ட்.காம். இந்த டொமைனில் செய்திகள் போன்ற விஷயங்கள் கொட்டிக்கிடக்கும். நான்காவது இடத்தில் இந்த மைக்ரோசாஃப்ட் தற்போது இடம்பிடித்துள்ளது.

Apple - நம்மளோட கிட்னி, ஹார்ட்லாம் வித்துதான் ஆப்பிள் ஸ்டோர்ல ஒரு பொருள் வாங்க முடியும்னு மீம்ஸ் போட்டவங்கள்ல ஒருத்தரா நீங்க? அப்போ உங்களுக்கு ஒரு கசப்பான தகவல் சொல்றேன். இந்தப் பட்டியலில் ஆப்பிள் ஐந்தாவது இடம்பிடித்துள்ளது.

Amazon -  இந்தப் பட்டியலில் அமேசான் டொமைன் ஆறாவது இடம்பிடித்துள்ளது. ஆப்பிள் மற்றும் அமேசான் டொமைனுக்கு இடையே உள்ள வித்தியசாம் மிகவும் குறைவுதான்.

Netflix - நெட்ஃபிளிக்ஸ் இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. இதைக் கொண்டாட நெட்ஃபிளிக்ஸ் பிரியர்கள் நெட்ஃபிளிக்ஸில் ஒரு நல்ல படத்தைப் பார்க்கலாம். அப்படியே, எங்களுக்கும் ஒரு Suggestion-அ கமெண்ட்ல போட்டு விடலாம்.

YouTube - எப்பவுமே யூ டியூப்லயேதான் இருக்கோம். ஆனால், யூ டியூப் எப்படி எட்டாவது  இடத்துக்குப் போச்சுனுதான் ஒரு டவுட். மற்றபடி குமுதா ஹேப்பி அண்ணாச்சி. யூ டியூப்க்கு எட்டாவது இடம் இந்தப் பட்டியலில்.

Twitter - டிரெண்டிங் முதல் சண்டைகள் வரை... பல பஞ்சாயத்துகளுக்கான களம்தான் ட்விட்டர். இந்தப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தை ட்விட்டர் பிடிச்ச்சிருக்கு.

WhatsApp - மெசேஜிங் ஆப்ல வாட்ஸ் அப்பை அடிச்சுக்க ஆளே இல்லை. அந்த வகையில் இந்த டொமைன் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.