`எங்க ஊரு மெட்ராஸு..!’ - சென்னையைக் கொண்டாடிய 10 திரைப்படங்கள்!

Green Curved Line

தமிழ் சினிமாவில் சென்னையை மையமாக வைத்து அதிகளவில் படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில், சென்னையைப் பற்றிய சினிமா என்றதும் நினைவுக்கு வரும் 10 படங்களை இங்கே காணலாம்...

மெட்ராஸ் - பா.இரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம், `மெட்ராஸ்’. வட சென்னை மக்களின் வாழ்க்கை மற்றும் அவர்கள் மத்தியில் நிலவும் அரசியல் ஆகியவற்றை பிரதிபலித்த திரைப்படம் இது. எங்க ஊரு மெட்ராஸு... இதுக்கு நாங்க தானே அட்ரஸு!

வடசென்னை - வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம், `வடசென்னை’. தரமான கேங்ஸ்டர் படமாக வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம். வடசென்னை பார்ட் 2-க்கு வெயிட்டிங் பாஸ்!

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

அலைபாயுதே - மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், ஷாலினி நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 2000-ம் ஆண்டு வெளியான திரைப்படம், `அலைபாயுதே’. காதல் கல்யாணத்துக்கு பின் வாழ்க்கையில் நிலவும் பிரச்னைகளைப் பேசிய திரைப்படம் இது. காதல் சடுகுடு!

அட்டக்கத்தி - பா.இரஞ்சித் இயக்கத்தில் தினேஷ் நடிப்பில் 2012-ம் ஆண்டு வெளியான திரைப்படம், `அட்டக்கத்தி’. ரூட்டு தல, இளமைப் பருவத்தில் வரும் காதல் ஆகியவற்றை சென்னை மக்களின் வாழ்வியலோடு கலந்து எடுத்த திரைப்படம். நிறைய பேருக்கு முதல் படமாக அமைந்து முத்திரை பதித்த திரைப்படம்.

காக்கா முட்டை - மணிகண்டன் இயக்கத்தில் விக்னேஷ், ரமேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம், `காக்கா முட்டை’. குடிசைப் பகுதிகளில் இருக்கும் மக்களின் வாழ்க்கை அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கும்.

மாநகரம் - லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஸ்ரீ, சுதீப் மற்றும் ரெஜினா நடிப்பில் ஜாவித் ரியாஸ் இசையில் 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம், மாநகரம். மாநகரத்துக்கு வரும் வெளியூர் மக்களின் பார்வை, இரவு நேர மாநகரம் ஆகியவற்றை கலந்து சிறந்த கமர்ஷியல் திரைப்படமாக வெளிவந்திருக்கும். விக்ரம்க்கு வெயிட்டிங் லோகேஷ்!

மதராசப்பட்டினம் - விஜய் இயக்கத்தில் ஆர்யா, எமி ஜாக்சன் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் 2010-ம் ஆண்டு வெளியான திரைப்படம், `மதராசப்பட்டினம்’. ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்த மதராசப்பட்டினத்தை காதல் கலந்து எளிமையான சொன்ன திரைப்படம் இது. எப்போதும் சென்னை வரவேற்கும் ஊர்தான்!

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - மிஷ்கின் இயக்கத்தில் ஸ்ரீ மற்றும் மிஷ்கின் நடிப்பில் இளையராஜா இசையில் 2013-ம் ஆண்டு வெளியான திரைப்படம், `ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’. மிஷ்கினின் கிளாசிக்கான திரைப்படம் இது.

பொல்லாதவன் - வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் 2007-ம் ஆண்டு வெளியான திரைப்படம், `பொல்லாதவன்’. வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் வெளிவந்த படங்களில் பொல்லாதவன் அவர்களின் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட். அந்த பைக் தீம்லாம் வேற லெவல்.

புதுப்பேட்டை - இந்த லிஸ்ட்ல தவிர்க்க முடியாத படம். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் 2006-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இது. படம் வெளிவந்த போது மக்கள் கொண்டாடத் தவறினாலும் தற்போது வேற லெவலில் விழுந்து விழுந்து கொண்டாடுகின்றனர்.

இந்த லிஸ்டில் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் அல்லது இந்த லிஸ்டில் விட்டுப்போன உங்களோட ஃபேவரைட் படத்தை கமெண்டில் சொல்லுங்க!