`வேதனை இன்றி விடியல் இல்லை!' - இயக்குநர் செல்வராகவனின் டாப் 10 `ட்விட்டர்’ தத்துவங்கள்
இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது பல தத்துவங்களை சொல்வது உண்டு. அவ்வகையில் அவர்கூறிய சில தத்துவங்கள் இங்கே...
“
-செல்வராகவன்
வாழ்க்கையில் மிகக் கொடுமை "என்ன பாத்துக்க யாருமே இல்லையே" என்ற புலம்பல்தான். உங்களை எதற்கு "ஒருவர்" பார்த்துக் கொள்ள வேண்டும்? அது மருத்துவமனையில் நோயாளியாய் இருப்பது போல! உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். அது கடவுளே உங்களை பார்த்துக் கொள்வது போல்!
“
-செல்வராகவன்
ஒரு இடத்தில் உங்களை மதிக்கவில்லையா , அமைதியாய் புன்னகைத்து விட்டு அங்கிருந்து வெளியேறி விடுங்கள் ! அவமானத்தை சகித்துக் கொண்டு உண்ணும் விருந்தை விட மானத்துடன் உண்ணும் பழையது அமிர்தம்.
“
-செல்வராகவன்
முன்னேற்றத்திற்கு மிகப் பெரும் தடங்கலாய் இருப்பது "பின்னால் பார்த்துக் கொள்ளலாம்" என்ற நினைப்புதான். சிறிதோ பெரிதோ எந்த காரியத்தையும் உடனே முடித்து விடுங்கள். மனம் முழுக்க ஒரு நிம்மதி பரவி முன்னேற்றத்தை கண் முன்னால் காண்பீர்கள்.
நான் அங்கே இருந்தால் நிம்மதியாய் இருப்பேன் , இங்கே இருந்தால் நிம்மதியாய் இருப்பேன் என்று ஒரு போதும் மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள்! அது வெறும் மாயை! வாழ்க்கையை முற்றிலும் கெடுத்து விடும்! இருக்கும் இடமே நிம்மதி! சொர்க்கம்! கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் புரியும்.
“
-செல்வராகவன்
தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சனையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள்.
“
-செல்வராகவன்
வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் நான்தான் காரணம் என்று பழி போட்டுக் கொள்ளாதீர்கள். மற்றவர்கள் பாவத்தை நாம் சுமந்தது போதும்!
இன்னொருவர் இருந்தால்தான் நிம்மதி என்று ஒரு பொழுதும் நினைத்து விடாதீர்கள். உண்மையில் அதைப் போல் ஒரு இம்சை எதுவும் இல்லை. தனிமையில் இருப்பதே பேரின்பம். பெரும் நிம்மதி.
செல்வராகவன் கூறியதில் உங்களோட ஃபேவரைட் தத்துவம் என்னனு கமெண்ட் பண்ணுங்க!