RJ Giri Giri முதல் RJ Blade Shankar வரை... அதகளம் பண்ணும் டாப் 10 ஆண் ஆர்.ஜே-க்கள்!

RJ Giri Giri (Big FM)

ரேடியோ கேக்குறவங்கள எண்டர்டெயின் பண்றது மட்டும் இல்லாமல் பாசிட்டிவான விஷயங்களைச் சொல்லி அவங்களை உற்சாகப் படுத்துவதிலும் கிரி வல்லவர். Don’t Worry with Giri Giri நிகழ்ச்சியெல்லாம் வேற லெவல்ல இருக்கும்.

RJ Ranjith (Suryan FM)

`இன்ஜினீயரிங் படிச்சிட்டு புடிச்ச வேலை செய்யுற அக்மார்க் சென்னை பையன்’. பாயிண்ட் டு பாயிண்ட், ரீசார்ஜ் போன்ற நிகழ்ச்சிகள்ல அதகளம் பண்ணிட்டு இருக்காரு.

RJ Bharath (Radio City)

 `அடுத்தவங்கள சந்தோஷப்படுத்துறதுலதாங்க என் சந்தோஷம்’னு நிகழ்ச்சிகள் பண்ணிட்டு இருக்காரு. டேஸ்ட் ஆஃப் சென்னை, சென்னை சூப்பர் கிங்க்ஸில் எம்.சி பண்ணது மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம். யூ டியூப்லயும் இப்போ கலக்கிட்டு இருக்காரு.

RJ Nitiz (Suryan FM)

கமெடிதான் இவருக்கு மெயின் விஷயம். இவரோட நிகழ்ச்சி பெயரே `செம காமெடி சார்’தான். 

RJ Sarithiran (Big FM)

`ஆ.ரே-வா இருந்து, அப்புறமா தொலைக்காட்சிக்கு வந்தாரு. வட போச்சே’ நியாபகம் இருக்கா? அந்த நிகழ்ச்சி மூல சன் மியூசிக்ல கலக்கினவரு இப்போ பிக் எஃப்.எம்ல மாஸ் பண்ணிட்டு இருக்காரு.

RJ Munna (Radio City)

`எப்போதும் முன்னேறிக்கிட்டே இருக்கணும்’ அப்டின்றத வாழ்க்கையோட மந்திரமா வச்சிருக்காரு. வருத்தம் தெரிவிச்சுக்குறோம், வேலைக்காரன் நிகழ்ச்சிகள் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம்.

RJ Mirchi Senthil (Radio Mirchi)

சரவணன் மீனாட்சி மூலமா மக்கள் மத்தியில் இடம் பிடிச்ச செந்தில் வேற லெவல் ரேடியோ ஜாக்கி. சுட்டக்கதைனு ஒரு நிகழ்ச்சி பண்ணிட்டு இருக்காரு.

RJ Balaji (Spotify)

இயக்குநர், நடிகர், கிரிக்கெட் கமாண்டேட்டர்னு ரொம்பவே பிஸியா இருக்குற பாலாஜி, ரேடியோ வழியா பிராங்க் பண்ணி மக்கள் மனசுல இடம் பிடிச்சாரு. நாலனா முறுக்கு மூலமா ஸ்பாட்டிஃபைல பலரும் இப்போ பாலாஜியின் குரலைக் கேட்டுட்டு இருக்காங்க.

RJ Blade Shankar (Suryan FM)

பிளேட் ஷங்கரை காமெடியனாகவும் நிறைய பேருக்கு தெரியும். பிளேட் நம்பர் 1 நிகழ்ச்சி மூலமாக செம ஹிட் ஆனாரு. `சின்ன தம்பி பெரிய தம்பி’ நிகழ்ச்சி இப்போ பண்ணிட்டு இருக்காரு.

RJ Selvaraj  (Suryan FM)

காலைல எஃப்.எம் கேக்குற ஆளா நீங்க? அப்போ நிச்சயம் உங்களுக்கு இவரைத் தெரிஞ்சிருக்கும். `சூர்யோதயம்’ நிகழ்ச்சி பண்ணிட்டு இருக்காரு.