டூர்வலம்: சென்னையில் இருந்து ஒன்டே டிரிப் - இந்த இடமெல்லாம் போலாம் பாஸ்!

வீக் எண்ட் வந்தாச்சு.. சென்னை வாசிகள் ஒரு நாள்ல போயிட்டு வர்ற மாதிரி சென்னைக்கு மிக அருகில் இருக்கும் இடங்களைப் பத்தி பார்ப்போமா?

வெதர் ரிப்போர்ட்ல அடுத்த 2 நாள் மழை வர வாய்ப்பு இருக்குனு சொன்னாங்க அப்படியே ஈ.சி.ஆர் - மகாபலிபுரம் பக்கம் ஒரு குட்டி ரெயின் ரெய்ன் டிரைவ் போவோமா?

Yellow Star

கார்ட் அட்டாக்

Yellow Star

ரேஸ் ட்ராக்ல வேகமா தல அஜித் மாதிரி கார் ஓட்டிட்டு போகலாமா? ரெடியா?  F1 ரேஸ் ஃபீல் கொடுக்கும் இந்த இடம் அட்வென்சர் பிரியர்களுக்கு டபுள் ப்ளேட் பிரியாணிதான்.

Yellow Star

கிளிக் ஆர்ட் மியூசியம்

Yellow Star

செல்ஃபி பிரியர்களுக்கான இடம், இந்த 3D Trick Art அருங்காட்சியக்கத்துக்குப் போனா, விதவிதமான 3டி தந்திரகலை ஓவியங்களுடன் அழகான செல்ஃபி எடுத்துக்கொண்டு திரும்பலாம். உங்க கண்ணு உங்களையே ஏமாற்றும், ஒருமுறை பார்த்த படத்தை திரும்பப் பார்க்காமா இருக்கமாட்டீங்க. எல்லாம் மாயை!

Yellow Star

விஜிபி ஸ்நோ கிங்டம்

Yellow Star

ஆன்லைன் க்ளாஸ் குட்டீஸ்கான பெஸ்ட் சாய்ஸ் இந்த குளுகுளு ஸ்நோ பார்க்.. குட்டீஸ் மட்டுமில்லாம பெரியவங்களும் ஃபன் பண்ணலாம். ஐஸ் சறுக்குமரம் இருக்கும் சும்மா ஜில்லுனு இருக்கும்!

Yellow Star

மீன் காட்சியகம்/ மரைன் கிங்டம்

Yellow Star

கடலுக்கு அடியில் இருக்கும் ஃபீல் தரும் இந்த மீன் காட்சியகத்தில் கலர் கலர் மீன்கள், சுறாக்கள் நீமோ படத்தில் பார்த்த மீன்கள் எல்லாம் இருக்கும். அதுமட்டுமா கடல் கன்னிகூட இருக்காங்க!

Yellow Star

சதுரங்கப்பட்டினம் கோட்டை

Yellow Star

கல்பாக்கம் பக்கதுல இருக்குது `சட்ராஸ்' கோட்டை. இப்போ தொல்பொருள் ஆய்வுத்துறை பராமரிக்கும் இந்த கோட்டையை, 17ஆம் நூற்றாண்டுல டச்சுகாரங்களும், ஆங்கிலேயர்களும் ஏற்றுமதி மையமா பயன்படுத்தினாங்களாம்! லைட்டா டெரர் லுக்ல இருக்குபா!

Yellow Star

திருவான்மியூர் பீச்

Yellow Star

வீக் எண்ட்னா ஆரவாரமா இருக்கும் திருவான்மியூர்ல ஒரு குட்டி பீச் எப்படி இருக்கும்? நம்ம அட்லி படத்துலலாம் இந்த பீச் அதிகம் பார்க்கலாம்!

Yellow Star

ஷீ ஷெல் மியூசியம் (Sea Shell Museum)

Yellow Star

இந்தியாவின் முதல் மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய கடல் சங்கு அருங்காட்சியம் இது. இங்க 40,000 வகை கடல் சங்குகள், சிப்பிகள், அரிய வகை முத்துகள் இருக்காம். இது எல்லாம் ஒரு தனி நபருடைய 33 வருட சேகரிப்பாம். சூப்பர்ல!

T20 Worldcup: மெண்டார் தோனி வரவால் ரவி சாஸ்திரிக்கு என்ன ரோல்… விவாதிக்கும் ரசிகர்கள்!