டூர்வலம் : சோழ நகரில் பார்க்கவேண்டிய இடங்கள்

தஞ்சாவூர் அரண்மனை

400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த  நாயக்க மன்னர்களின் ஆட்சியில் கட்டப்பட்ட அரண்மனை. காலத்தால் அழிக்கமுடியாத வரலாற்று சாட்சியாக இருக்கும் இந்த இடத்தை பார்க்க ஒரு குட்டி ட்ரிப் அடிக்கலாமா?

சரஸ்வதி மகால் நூலகம்

ஆசியாவின் மிகப்பழமையான நூலகம் இது.தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் இருக்கும் இந்த சோழர் காலத்து நூலகத்தில் பல அரியவகை ஓலைச்சுவடிகள் இருக்காம். அது மட்டுமா நூலகத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணா்த்த ஒரு அருங்காட்சியகமும் உள்ள இருக்கு. மறக்காம போங்க!

மனோரா கோட்டை/ மனோரா கடற்கரை

1814ல் கடல் போரில் நெப்போலியனுடன் நடந்த போரில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதைப் பாராட்ட தஞ்சாவூர் மராத்திய மன்னர் இரண்டாம் சரபோஜி ஒரு நினைவுச்சின்னத்தை நிறுவினார். அது தான் இது! இந்த கோட்டை மாவட்டத்தின் மிக முக்கியமான சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுள் ஒன்று.

ஷ்வார்ட்ஸ் தேவாலயம்

மராட்டா வம்சத்தின் காலனிய வரலாற்றின் அடையாளமாக இருக்கும் இந்த தேவாலயத்தை மிஸ் பண்ணிடாதீங்க

இராஜ இராஜன் மணிமண்டபம்

நகரின் நடுவில் இருக்கும் இந்த அழகான மணிமண்டபம், சோழா்காலத்து கட்டிடக்கலையின்படி கட்டப்பட்டு இருக்கிறது.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்

இலங்கை முள்ளிவாய்க்காலில் 2009-ம் நடந்த போரில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக, தஞ்சாவூர்- திருச்சி 4 வழிச் சாலையில் உள்ள விளார் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைச்சிருக்காங்க.

தென்பெரம்பூர் அணை

எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் ஒன்று. முழு ஊரடங்கு அமலில் இருந்தப்போதும் இங்க பயங்கர கூட்டம் இருந்ததாம். அப்படி என்ன இருக்கும்? பார்க்கலாம்!

சிவகங்கை பூங்கா

பூங்கா இருக்கு...ஆனால் இல்லை... ஒரு காலத்தில் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக இருந்த இந்த பூங்கா..ஸ்மார்ட் சிட்டு திட்டத்தின் கீழ் வந்த பின் முடங்கி இருக்கிறது. அரசின் கவனத்திற்கு

தஞ்சை பெரிய கோவில்

தமிழர்களின் கட்டடக் கலைக்கு சான்று இந்த பெரிய கோவில். விமான கோபுரத்தின் கட்டுமான அமைப்பை பார்த்து பொறியியல் வல்லுநர்களே வியக்கிறார்கள். வாங்க போவோம்!

கல்லணை

தமிழர்களின் நீர் மேலாண்மை அறிவை பறைசாற்றும் கல்லணை,1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருகிறது என்றால் நம்பமுடிகிறதா?

மேலும் சில இடங்கள்: தஞ்சபுரீஸ்வரர் கோயில் பூண்டி மாதா பேராலயம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் நாகேஸ்வரன் கோயில் வடுவூர் பறவைகள் காப்பகம் திருவையாறு ஐயாறப்பர் கோயில் ஒப்பிலியப்பன் கோயில் ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் துர்க்கை அம்மன் கோயில் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் சூரியனார் கோயில்

டூர்வலம்: கும்பகோணத்தில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்!