Thoothukudi

Thoothukudi

Thoothukudi

Thoothukudi

டூர்வலம்: தூத்துக்குடி சுற்றுவட்டாரத்துல இந்த 10 இடங்களைப் பார்த்திருக்கீங்களா?

முயல் தீவு

அழகான நிலப்பரப்பு.. கடல்.. கலங்கரை விளக்கம்.. கேட்கவே சூப்பரா இருக்குல? காணும் பொங்கலுக்கு இந்த தீவில் மக்கள் கூட்டம் குவியுமாம். தூத்துக்குடி மீனவர்கள் புதிய படகு வாங்கினால் இங்க இருக்கும் கோபுரத்து முனியசாமி மற்றும் கிறிஸ்தவ ஆலயத்துக்கு வந்து பூஜை செய்த பிறகுதான் தொழிலுக்குப் போவார்களாம். இது ஒரு பாதுகாக்கப்பட்ட வரலாற்றுப் பொக்கிஷம்!

மணப்பாடு கடற்கரை

தெற்காசியாவின் வெனிஸ் என அழைக்கப்படும் கடற்கறை ஊர் மணப்பாடு. இதுக்கு பெயர் எப்படி வந்தது தெரியுமா? இங்க மணல் காற்று வீசுவது பாட்டிசைப்பது போல இருக்குமாம். இங்க இருக்கும் போர்ச்சுக்கீசிய முறையில் கட்டப்பட்ட தேவாலயங்கள் , மீனவ மக்கள் , படகுகளுக்காக நிச்சயம் ஒரு விசிட் அடிங்க!

நவதிருப்பதி

தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள விஷ்ணு பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 9  கோயிலும் ஒவ்வொரு கிரகத்தை குறிக்கும். இந்த நவதிருப்பதி தலங்களுக்குச் சென்றாலே திருப்பதி சென்ற புண்ணியம் கிடைக்குமாம்.

பாஞ்சாலங்குறிச்சி கோட்டை

வீரபாண்டிய கட்டபொம்மன் - ஊமைத்துரை இங்க வாழ்ந்ததாகவும், பின் ஆங்கிலேயர்கள் கைப்பற்றி சிதைத்த கோட்டை இது. தமிழ்நாடு அரசு இப்போ இருக்கிற கோட்டையைக் கட்டபொம்மனின் நினைவாகக் கட்டியிருக்காங்க. இங்க அவரின் வீரத்தை சொல்லும் ஒவியங்கள் இருக்கு. மறக்காம போய்ப் பாருங்க!

கொற்கை துறைமுகம்

பாண்டியர்களின் கடற்கரை துறைமுகம். இன்னொரு விஷயம் தெரியுமா? கொற்கை முத்துகளை கிளியோபாட்ராவின் கிரீடத்துக்கு உபயோகப்படுத்தினதா வரலாறு சொல்லுது. இப்பவும் பாண்டிய காலத்து கல்வெட்டுகள், மீன் சின்னம் பொறிக்கப்பட்ட தூண்களும் இருக்கு. இங்க பிரசித்திப்பெற்ற வெற்றிவேலம்மன் கோயிலுக்கு அதிக சுற்றுலா பயணிகள் வர்றாங்க.

காயல்பட்டினம்

கொற்கைக்கு அடுத்து பிரசித்திபெற்ற துறைமுகம் இந்த பழமையான் காயல்பட்டினம். Discovery of India புத்தகத்தில் நேரு இதைப்பத்தி சொல்லிருக்காரு. காயல்பட்டினத்தில் வீடுகள் சூப்பரா இருக்குமாம். மறக்காம கடற்கரைப் பூங்காக்கு போங்க!

பனிமயமாதா பேராலயம்

தூத்துக்குடியின் அடையாளங்களில் ஒன்று `பனிமய மாதா' பேராலயம். அனைத்து மதத்தினரும் அவர்களின் பிரார்த்தனை நிறைவேற பனிமய அன்னையை வழிபடுவார்கள். ஆண்டு தோறும், ஜூலையில் நடக்கும் பேராலயத் திருவிழாவை மிஸ் பண்ணிடாதீங்க மக்கா!

குலசேகரப்பட்டிணம்

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசராவுக்குப் போயிருக்கீங்களா? ஒவ்வொரு வருஷமும் அக்டோபர் மாதம் பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திகடனாக பல்வேறு வேடங்கள் அணிந்து தசராவின் 10-வது நாளான விஜயதசமியன்று அம்மன் அருள் பெறுவார்கள். கேமரா கண்களுக்கு விருந்து அளிக்கும் திருவிழா இது!

எட்டயபுரம் 

`முண்டாசு கவி’ சுப்பிரமணிய பாரதியார் பிறந்த ஊர். அவர் வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக அரசால் மாற்றப்பட்டுள்ளது. அங்கிருந்து புறப்பட்டு எட்டயபுரம் அரண்மனைக்கு போகலாம். ஒரு காலத்தில் சிறப்பாக இருந்த அரண்மனை இன்று எப்படி இருக்கு தெரியுமா? வரலாற்று சாட்சியாக இருக்கும் இடத்தை பராமரிக்கலாமே?

திருச்செந்தூர் முருகன் கோயில்

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான இந்தக் கோயில் தென் இந்தியாவின் புகழ்பெற்ற புனித தலங்களில் ஒன்று. இந்தக் கோயிலில் வள்ளிகுகை மற்றும் நாழிகிணறு ஆகியவை புனித இடமாகக் கருதப்படுகின்றன.

இது தவிர பார்க்க வேண்டிய சில இடங்கள்

தேரிக்காடு ஆதிச்சநல்லூர் கழுகுமலை வைணவ கோயில் அய்யனார் சுணை

ஜெய்பீம்: 1993-ல் முதனை கிராமத்தில் என்ன நடந்தது… கடலூர் மாவட்டத்தை உலுக்கிய ராஜாக்கண்ணு வழக்கு!