டூர்வலம்: கன்னியாகுமரியில் கட்டாயம் விசிட் அடிக்க வேண்டிய 10 ஸ்பாட்டுகள்!

மாயாபுரி அருங்காட்சியகம்

இந்தியாவின் முதல் மெழுகு அருகாட்சியமான இதில் அப்துல்கலாம், மைக்கேல் ஜாக்சன், பாரக் ஒபாமா, சார்லின் சாப்ளின், எம்.எஸ்.சுப்புலட்சுமி என ஏராளமான பிரபலங்களுக்கு சிலைகள் இருக்கின்றன. அது மட்டுமா நம்ம தளபதி விஜய்க்கும் சிலை இருக்கே. Dont miss it boss!

பத்மனாபபுரம் அரண்மனை

17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைமை இடமாக இருந்த இந்த 6 ஏக்கர் 'கேரள' கட்டடக் கலை அரண்மனையை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க!

வட்டக்கோட்டை

திருவாங்கூர் சமஸ்தானத்தால் கட்டப்பட்ட இந்த கடல் கோட்டையிலிருந்து பார்த்தால் பத்மநாபபுரம் அரண்மனை தெளிவாத் தெரியுமாம்.

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில்

பிள்ளையாரை ஆண் தெய்வமா மட்டுமே வழிப்பட்டு பார்த்து பழகிப்போன நமக்கு இந்த கோயில்ல பெண் உருவம் கொண்ட பிள்ளையார் இருக்காருனு சொன்னா எப்படி இருக்கும்? அவங்க பெயர்கள் என்ன தெரியுமா? விக்னேஷ்வரி - விநாயகி - கணேஷி! அது மட்டுமா? இசை எழுப்பும் தூண்கள் கூட இங்க இருக்குப்பா! மறக்காம போங்க.

வியூ டவர்

தொலைநோக்கியில் கடலையும் , விவேகானந்தர் சிலை - வள்ளுவர் சிலையையும் பார்க்கும் அனுபவம் வேற லெவல்! சூரியன் உதயத்தையும் - மறைவையும் ஒரே இடத்தில் பார்க்கமுடியுமா என கேட்டால் அப்போ இந்த இடத்திற்கு வாங்கப்பு!

மருந்துவாழ் மலை

ராமாயணத்துல அனுமான் சஞ்சீவி மலையை தூக்கிட்டு போனாருனு சொல்லுவாங்கல? அந்த மலையோட ஒரு பகுதி உடைஞ்சு விழுந்து இந்த மருந்துவாழ் மலை உருவாச்சுனு சொல்றாங்க. இந்த மருந்துவாழ் மலையில பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ குணம் நிறைந்த அரிய வகை மூலிகைகள் இருக்காம்.

முக்கடல் சங்கமம்

வங்கக் கடல், அரபிக் கடல், இந்தியப் பெருங்கடல் என  மூன்று பெருங்கடல்களின் இணைவுப் புள்ளியாக இருக்கும் இந்த இடத்துல சூரியன் மறைவதைப் பார்க்க 2 கண்ணு போதாதாம்!

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில்

சக்தி வாய்ந்த அம்மனாக நம்பப்படும் இந்தக் கோயிலுக்கு மத, இன வேறுபாடு இன்றி மக்கள் வருகிறார்கள்.. மார்டன் உடைகளுக்கு நோ!

உலக்கை அருவி

கன்னியாகுமரியில் பல அருவிகள் இருந்தாலும் இந்த அருவி கொஞ்சம் ஸ்பெஷல்தான். இந்த அருவிக்கு காட்டு வழியாகத்தான் போகணும். கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் பசுமையான காடுகளும் மலைகளும் இருக்கும் இந்த இடத்தை மிஸ் பண்ணிடாதீங்க.

மாத்தூர் தொட்டிப் பாலம்:

மலையின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு நீரைக் கொண்டு போறதுக்காக அமைக்கப்பட்டது. ஆசியாவின் மிக நீளமான இந்தத் தொட்டிப் பாலத்தை நேர்ல பார்த்தா அசந்துப்போயிடுவீங்க..!

9 மாதம் முதல் 4 வயது வரையிலான குழந்தைகளுக்கும் ஹெல்மெட் – மத்திய அரசின் 3 அம்ச பாதுகாப்பு விதிகள்