Palm Tree
Palm Tree

டூர்வலம்:  வீக் எண்ட் குட்டி ரைடு...  பாண்டிச்சேரி போலாமா?

Burst with Arrow

Rock Beach, ஆரோவில், அழகழகான வீதிகள் மட்டுமே பாண்டிச்சேரி அல்ல. இவற்றையும் தாண்டி பாண்டிச்சேரியில் கண்டதும் காதலுடன் கசிந்துருகச்செய்யும் 7 இடங்களின் அறிமுகம் இங்கே... அடுத்தது பாண்டிச்சேரிக்குப் போகும் போது இந்த இடங்களுக்கும் மறக்காம ஒரு விசிட் அடிங்க..

100 ஏக்கர் நிலத்தில் `தனி ஒருவன்' 25 ஆண்டுகள் உழைத்து உருவாக்கிய காடு இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? நீங்க நம்பலனாலும் அதுதான் நெசம்!

ஆரண்யா வன சரணாலயம்

கலர் கலராக படையெடுக்கும் வெளிநாட்டு பறவைகள் முதல் குழந்தைகள் விளையாடும் சறுக்கு மரம் வரை ஊசுடு ஏரிக்கு 100 மார்க் போடலாம்! படகு சவாரியும் இருக்குபா...

ஊசுடு ஏரி

புதுச்சேரி ஞாயிறு சந்தையில 100 ரூபாய்க்கூட துணி கிடைக்குமாம். பழைய கேமராக்கள் முதல் கிச்சன் பொருட்கள் வரை மிக மிகக் குறைவான விலையில் எல்லாம் கிடைப்பதால் இந்த இடம் ரொம்ப ஃபேமஸ்!

ஞாயிறு சந்தை

ஆழ்கடல் பிரியர்களுக்கான இடம் இது.. கலர் கலர் அரிய வகை மீன்கள், சுறாக்களை கூட கிட்ட பார்க்கலாமாம். சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் இடங்களில் இதுவும் ஒன்று! நீச்சல் தெரியலைனாலும் பரவாலையாம்.. நோட் பண்ணிக்கோங்க!

டெம்பிள் ரீஃப் ஸ்கூபா டைவிங்

புதர் மண்டி பழைய இடம் போல காட்சியளிக்கும் இது, சோழர்கால மீனவ கிராமம். தொல்பொருள் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் இந்த இடம் சோழகளுக்கும் ரோமானியர்களுக்கும் இடையிலான வாணிபத் தலமாக இருந்ததாம்!

அரிக்கமேடு

புதுச்சேரியின் பாரம்பரிய கட்டடங்களைப் பார்க்க ஹெரிட்டேஜ் வாக் போகலாம். அதுமட்டுமல்லாமல் சைக்கிள் ரிக் ஷா டூரும் போகலாம். அவ்ளோ ஏன் நாமளே சைக்கிள் எடுத்து ஊர் சுற்றிப் பார்க்கலாம்!

சைக்கிள் ரிக்ஷா டூர்

பாரடைஸ் கடற்கரை backwater-ல் ஜாலியா ஒரு படகுசவாரி போக ஏற்ற இடம். குடும்பத்துடன் நீங்கள் படகுசவாரி செய்து குதூகலிக்கலாம்.

சுண்ணாம்பு ஆறு