டூர்வலம்: திருவண்ணாமலையில் இந்த 8 இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க..!
டூர்வலம்: திருவண்ணாமலையில் இந்த 8 இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க..!
அண்ணாமலையார் திருக்கோயில்
“”
25 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாய் 9 கோபுரங்களுடன் அமைந்திருக்கும் சிவனின் பஞ்சபூத அக்னி தலம். கிரிவலப்பாதையில் இருக்கும் எழுத்து மண்டபம் ஓவியக் கூடமாக திகழ்கிறது. இதுதவிர கந்தாஸ்ரமம், பவழக்குன்று, கிரிவலப்பாதை அஷ்டலிங்கங்களைப் பார்க்கலாம். கிரிவலம் போலாமா?
ரமணாஸ்ரமம்
“”
இயற்கைச் சூழலில் அமைந்திருக்கும் ரமண மஹரிஷியின் ஆசிரமம், அவரின் சீடர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள தியான மண்டபம் மனதுக்கு அமைதியைக் கொடுக்கும்.
பர்வதமலை
“”
திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள திருத்தலங்களில் முக்கியமான ஒரு தலம் இது. தினமும் சித்தர்கள் வந்து செல்லுவார்கள் என நம்பப்படும் இந்த புனித மலைக்கு நாமும் போகலாமா?
ஜவ்வாதுமலை
“”
கிழக்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான ஜவ்வாது மலையில் மலையாளிகள் எனும் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த மலையைச் சுற்றி 100-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. மலையில் இருக்கும் பீமன் நீர்வீழ்ச்சி, அமிர்தி நீர்வீழ்ச்சி, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி சுற்றுலா மையங்களாக இருக்கின்றன.
செஞ்சிக்கோட்டை
“”
மூன்று மலைகளின் நடுவே பிரமாண்டமாய் இருக்கும் தேசிங்கு ராஜா கோட்டை. தமிழ் மண்ணை ஆண்ட மன்னர்களின் வாழ்க்கையை எடுத்துச் சொல்லும் சாட்சியாகக் கம்பிரமாக இருக்கும் செஞ்சிக்கோட்டை நிச்சயமாகப் பார்க்க வேண்டிய இடம்.
விருபாக்ஷா குகைக்கோவில்
“”
இங்கு இருக்கும் சிற்பங்கள் சமணர்களின் பெருமையை உணர்த்தும் வகையில் இருக்கும். ரமணாஸ்ரமம் வழியாக ஸ்கந்தாஸ்ரமத்தைக் கடந்து விருபாக்ஷா குகையை அடையலாம்.
சாத்தனூர் அணை
“”
அழகு கொட்டிக்கிடக்கும் தென்பெண்ணையாற்றில் கட்டப்பட்டுள்ள இந்த நீர்தேக்கம் மட்டுமல்லாமல், அங்கிருக்கும் பூங்காக்கள், முதலைப் பண்ணையையும் மிஸ் பண்ணிடாதீங்க. திருவண்ணாமலையில நல்ல மீன் சாப்பிடனும்னா இங்க போங்க மக்கா!
சாத்தனூர் அணை
“”
அழகு கொட்டிக்கிடக்கும் தென்பெண்ணையாற்றில் கட்டப்பட்டுள்ள இந்த நீர்தேக்கம் மட்டுமல்லாமல், அங்கிருக்கும் பூங்காக்கள், முதலைப் பண்ணையையும் மிஸ் பண்ணிடாதீங்க. திருவண்ணாமலையில நல்ல மீன் சாப்பிடனும்னா இங்க போங்க மக்கா!
காவலூர் தொலைநோக்கி மையம்
“”
ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கியை பார்க்கப் போகலாமா? சனிக்கிழமைகளில் மதியம் 2 - 5 மணி வரை மட்டுமே இந்த மையத்தில் பொதுமக்கள் பார்வையிட அனுமதியாம்... ப்ளான் பண்ணிப்போங்க!
பிற இடங்கள்
திருமலை ஜைனர்கள் கோயில்
படவேடு
நெடுங்குணம் ராமர் கோயில்
மாமர குகை
ஆனைமலை
தென்னாங்கூர் பாண்டுரங்கன் ஆலயம்