டூர்வலம்: ராமேஸ்வரம் ட்ரிப் அடிச்சா இந்த 10 இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க!

அப்துல் கலாம் மணிமண்டபம்

`விண்வெளி நாயகன்'  அப்துல் கலாம் நினைவகம் ராமேஸ்வரத்தில் மிஸ் பண்ணக்கூடாத இடங்களில் முக்கியமானது. விஞ்ஞானி தொடங்கி குடியரசுத் தலைவராக பணியாற்றிய காலம் வரை கலாம் தொடர்பான ஓவியங்கள், ஒளிப்படங்கள், பயன்படுத்திய பொருட்கள், உடைகள், கண்டுபிடிப்பின் மாதிரிகள் எல்லாம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. Dont Miss!

அக்னி தீர்த்தம்

ராமேஸ்வரம் வரும் மக்கள் இந்தத் தீர்த்ததில் நீராடியபின் பயணத்தைத் தொடங்குவார்கள் என நம்பப்படுகிறது. அப்படி என்ன ஸ்பெஷல்? ராமர், ராவணனை வதம் செய்தபிறகு இங்கே நீராடி சிவனின் ஆசி பெற்றார் என்று புராணங்கள் சொல்கின்றன. அதேபோல நாமும் நீராடினால் பாவங்கள் அகலும் என்பது மக்களின் நம்பிக்கை! அதுவே லட்சக்கணக்கான மக்கள் இங்கு வரக் காரணம்!

ராமநாத சுவாமி திருக்கோவில்

கி.பி 12-ம் நூற்றாண்டில் பாண்டியர்களால் கட்டப்பட்டது என நம்பப்படும் இந்தக் கோயில் ராமேஸ்வரத்தின் மையப்பகுதியில் இருக்கிறது. கட்டடக்கலைக்குப் பெயர் பெற்றது. ராவணணிடமிருந்து சீதையை மீட்ட பின் அந்த பாவத்தைப் போக்கிக் கொள்ள ராமர் சிவலிங்கத்தை வடிவமைத்து வழிபட்ட இந்த இடம், இந்தியாவிலுள்ள 12 ஜோதிலிங்க வழிபாட்டுத் தலங்களுள் ஒன்று!

பாம்பன் பாலம்:

ராமேஸ்வரம் தீவையும், நாட்டின் பிற பகுதியையும் இணைக்கும் பாம்பன் பாலம், இந்தியாவின் இந்த  இரண்டாவது பெரிய கடற்பாலம். கப்பல் செல் திறந்து மூடும் அமைப்பு புகழ் பெற்றது. ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்ல ஒரு ரவுண்ட் போலாமா?

ஆதாம் பாலம்/ராமர் பாலம்:

சீதையைக் காப்பாற்ற ராமர் கட்டிய பாலம்னு சொல்றாங்க. அதுமட்டுமில்லாம கிறிஸ்தவ வரலாற்று கதைகள்ல இந்த பாலத்தோட குறிப்புகள் இருக்காம். இந்தியா, இலங்கையை இணைக்கும் இந்தப் பாலத்தின் கற்கள் 7,000 ஆண்டுகள் பழமையானவையாம்!

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில்

ராமர், பாலம் கட்ட மிதக்கும் கற்கள் பயன்படுத்தினார்னு கேள்விப்பட்டு இருக்கோம்ல? இந்த கோயிலில் ராமர் பயன்படுத்திய மிதக்கும் கற்கள் இருக்கு. அது மட்டுமா 30 வருஷமா அணையாம இருக்கிற விளக்கும் இருக்கு!

தனுஷ்கோடி

செல்லும் பாதை இரு பக்கமும் கடல். ஒரு பக்கம்  வங்காள விரிகுடாவும் மற்றொரு பக்கம் இந்தியப் பெருங்கடலும் இருந்தால் எப்படி இருக்கும்? புகைப்படக்காரர்களுக்கு விருந்து அளிக்கும் ராமேஸ்வரம் தீவின் தென்கோடி முனையான தனுஷ்கோடி, 1964 புயலில் பெரியளவில் சேதமடைந்தது. புயலுக்கு பின் இடிந்த நிலையில் இருக்கும் தேவாலயம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்கிறது!

நவபாஷாணம் நவக்கிரக் கோயில்

பித்ரு தோஷம் உட்பட பல தோஷங்களை நிவர்த்தி செய்யும் தேவிபட்டினம் நவபாஷாணம் நவக்கிரக் கோயில். கடல் நீருக்கு நடுவில் இருக்கும் இந்த கோயிலில் ராமர் நவபாஷாண நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்தார் என நம்பப்படுகிறது. மேலும் கடல் நீர் தீர்த்தமாக இருக்கு!

IFS தேர்வில் சாதித்த திவ்யா – முதல் முயற்சியிலேயே தமிழகத்தில் முதலிடம் பிடித்த திண்டுக்கல் மாணவி!