21,600 தங்கத்தகடுகள்; காஸ்மிக் நடனம் -  தில்லை நடராஜர் கோயிலின் ஆச்சரியங்கள்!

சித்ர சபை, கனக சபை, நாட்டிய சபை, ராஜ சபை, தேவ சபை என்று அழைக்கப்படும் ஐந்து சபைகள் இருந்துள்ளது, இங்கு இருக்கும் புனித குளம் சிவகங்கை என்று அழைக்கப்படுகிறது.

தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட கோயிலாகவும், பஞ்சபூதங்களில் இந்த கோயில் " ஆகாயத்தை" குறிக்கும் இடமாகவும் உள்ளது

சிவபெருமான மனித அவதாரத்தில் வீற்றிருக்கும், அதிலும் நடனமாடிய காட்சியிலேயே இருக்கும் உலகின் ஒரே கோயில் தில்லை நடராஜர் ஆலயம் தான்

இங்கு இருக்கும் 21,600 தங்க ஓடுகள் ஒரு நாளில் மனிதன் சுவாசிக்கும் மூச்சின் சரியான எண்ணிக்கை என கூறப்படுகிறது

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

நடராஜப் பெருமான் ஆடிக்கொண்டி -ருக்கும் ஆனந்தத் தாண்டவம் என்ற திருக்கோலம் காஸ்மிக் நடனம்  (COSMIC DANCE) என்று பல ஆய்வுகளால் கருதப்பட்டுள்ளது

இந்த கோயிலில் இறைவனான சிவபெருமான் நடராஜராகவும், அம்பாள் உமையாம்பிகை மற்றும் திரிபுரசுந்தரியாகவும் அழைக்கப்படுகி -ன்றனர்

இக்கோயிலில் நடராஜ பெருமான் சந்நிதிக்கு அருகிலேயே இருக்கும் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான கோவிந்தராஜ பெருமாள் சந்நிதி சைவ, வைணவ ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது

முன்னொரு காலத்தில் இங்கு தில்லை மரங்கள் அதிகம் இருந்ததன் காரணமாக இது தில்லைவனம் என அழைக்கப்படுகிறது

அப்பர்,சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் என நால்வராலும் பாடப் பெற்ற தலமாக உள்ளது, மேலும் மூவர் பாடிய தேவாரம் திருவோலைச்சுவடிகள் கண்டெடுக்கப்பட்டது இங்குதான்.

இத்தலத்தில் வியாக்கிர பாத முனிவருக்கும், “யோகக்கலையின்” பிதாமகரான “பதஞ்சலி” முனிவருக்கும் ஒரே நேரத்தில் தனது திருநாட்டிய நடன தரிசனத்தை தந்து அருள் புரிந்திருக்கிறார் சிவபெருமான்.