இந்த 10  ரகசியங்கள் உங்களுக்குத்  தெரியும்?  

ஏழு வயதில் பள்ளி மேடை நாடகத்தின்போதே இவருக்கு சினிமா மீது ஆர்வம் வந்திருக்கிறது. அதற்குக் காரணம் பள்ளியில் திரையிடப்படும் சினிமாக்கள்தான்.

ஆரம்பக் கட்டத்தில் தன்னுடைய மாமா தயாரித்த சேது படத்தில் இயக்குநர் பாலாவின் உதவி இயக்குநராக சினிமா பயணத்தை ஆரம்பித்தார்.

அமீரின் மெளனம் பேசியதே, ராம் படங்களில் அவருக்கும் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார், சசிகுமார்.

சுப்ரமணியபுரம் ஆரம்பிக்கும்போது பாட்டே இல்லாமல், இளையராஜாவின் பாட்டுக்களை வைத்துதான் படமாக்க முடிவு செய்திருந்தார்.

சென்னை 600 028 படத்தின் போஸ்டரை பார்த்து சுப்ரமணியபுரம் கதையின் நாயகனாக ஜெய்யை தேர்வு செய்திருக்கிறார், சசி.

20 தயாரிப்பாளர்களுக்கும் மேல் பசங்க படத்தின் கதையை சிரிச்சு, ரசிச்சு கேட்டும் நம்பிக்கையில்லாமல் நிராகரித்தனர். ஆனால், சசிகுமார் பசங்க கதையை பாண்டிராஜிடம் கேட்கும்போது ஒரு இடத்தில்கூட எந்த ரியாக்சனும் காட்டாமல் கதையைக் கேட்டவுடனே ஓகே சொல்லிவிட்டார்.

சுப்ரமணியபுரம், ஈசனுக்கு அடுத்ததாக நடிகர் விஜய்க்கு ஒரு வரலாற்றுக் கதையை எழுத்தாளர் சு.வெங்கடேசனுடன் இணைந்து சொன்னார், சசிகுமார். அது விஜய்க்கும் பிடித்துப்போக பட்ஜெட் சாத்தியமில்லாததால் இப்போதுவரை படமாக்கப்படவில்லை.

நாடோடிகள் படத்தில் முதன்முதலில் சசிகுமார் ரோலில் நடிக்க இருந்தவர் ஜெய். அவர் கால்ஷீட் பிரச்னை காரணமாகத்தான் நாடோடிகள் படத்தில் சசிகுமார் உள்ளே வந்தார்.

சர்வதேச வாள்வீச்சு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமை பெற்ற பவானி தேவி ஆரம்பக் காலக்கட்டங்களில் பயிற்சிக்கு பணம் இல்லாமல் தவித்தபோது சசிக்குமார் உதவி செய்து பயிற்சியை தொடர வைத்தார்.

எழுத்தாளர் வேல.ராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை நாவலை நடிகர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனை வைத்து வெப்சீரீஸை இயக்க உள்ளார், சசிகுமார்.