காரங்களின் ராணி `காந்தாரி மிளகாய்’ பற்றிய 7 தகவல்கள்!
காரத்துக்குப் பெயர் பெற்ற காந்தாரி மிளகாய் சிவப்பு மிளகாய் அல்லது கார மிளகாய் என்று அழைக்கப்படும். பார்க்க சிறிதாக இருந்தாலும் காரத்தில் பெரியது.
பச்சை நிறமாக இருக்கும் இது பழமானதும் சிவப்பு நிறமாக மாறிவிடும். தமிழகத்தைப் பொறுத்தவரை நீலகிரியிலும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பயிரிடப்பட்டு வந்தது.
தமிழகத்தில் நுகர்வோர் அதிகம் விரும்பாததால் கேரளாவுக்கு அனுப்பப்படும் இந்த வகை மிளகாய்கள், ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகின்றன.
கிலோ ரூ.400 - 500 என்கிற விலையில் விற்கப்பட்டு வந்த இவற்றின் உற்பத்தி தமிழகத்தில் மெல்ல மெல்ல சரிந்து வருகிறது. வரவேற்பு இல்லாததால் விவசாயிகள் பயிரிடுவது குறைந்துவிட்டது என்கிறார்கள்.
பொதுவாக மிளகாய்கள் நிலத்தை நோக்கி வளரும் தன்மை கொண்டவை. ஆனால், காந்தாரி மிளகாய் வானத்தை நோக்கி வளருபவை.
இதிலிருக்கும் காரத்தன்மை வேறு எந்த ரக மிளகாயிலும் கிடைக்காது.
இதன் பழுத்த பழங்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் சாறு உட்கொள்ளும் போது இரத்த உறைதலைத் தடுக்கும், மேலும் கொழுப்பு கட்டுப்பாடு, இரத்த சுத்திகரிப்புக்கு உதவுகிறது. இந்த சாறை அதிகம் உட்கொண்டால், வயிற்றில் புண், அல்சர் ஏற்படும்.