தமிழ் திரையுலகில் நீண்ட காலமாக உருவாக்கத்தில் இருக்கும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருக்கும் சில படங்கள் பற்றி இதோ.
அயலான்
2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் வேலைகள் இன்னும் நீண்டுக்கொண்டிருக்க, அதன்பிறகு தொடங்கப்பட்ட சிவகார்த்திகேயனின் அடுத்த சில படங்கள்கூட வெளியாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும் எதிர்பார்ப்பில் 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படம் தற்போது என்ன நிலையில் இருக்கிறதெனத் தெரியவில்லை. இடைபட்ட காலத்தில் வெளியான ஹாலிவுட் தர டீஸரும் ‘ஒரு மனம்’ மெலோடி பாடலும் ரசிகர்களின் ஏக்கத்தை கூட்டியது.
2019-ஆம் ஆண்டு மத்தியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் இன்னமுமே முழுமையடையாமல் இருக்கிறது என்பதும் இன்னமும் சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்படவிருக்கிறது என்பதும்தான் சோகங்கள்.
உங்க Favourite Celebrities பத்தின 1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!
இதன் சோகக் கதை பெரும் துன்பியல் சம்பவம். 2019-ஆம் ஆண்டு படம் தொடங்கப்பட்டது. ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட கோர விபத்து, கொரானா, தேர்தல், பிக்பாஸ் என அடுத்தடுத்து இடைஞ்சல்கள் வந்துகொண்டே இருந்தன.
விவேக், நெடுமுடி வேணு போன்ற கலைஞர்களின் மரணமும் காஜல் அகர்வால் திருமணம் செய்துகொண்டு நடிப்பிலிருந்து ஒதுங்கிவிட்டதும் இவர்கள் நடித்தக் காட்சிகளை திரும்ப ஷூட் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளியிருக்கிறது.