விஜய் லுக் முதல் ஹாரிஸ் மியூசிக் வரை... துப்பாக்கி படத்தில் என்ன ஸ்பெஷல்?

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான துப்பாக்கி திரைப்படம், வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இந்தப் படம் வெற்றி பெற்றதற்கான காரணங்கள் என்ன என்பதைப் பார்க்கலாமா...

துப்பாக்கி படத்தின் கதையை தமிழில் எடுப்பதற்கு முன்னர் அக்‌ஷய் குமாரை வைத்து இந்தியில் எடுக்க வேண்டும் என்பதுதான் ஏ.ஆர்.முருகதாஸின் ப்ளான். ஆனால், கால்ஷீட் பிரச்னையால் இந்தப் படத்தை முதலில் தமிழில் எடுத்தார்கள். இந்தி ரீமேக்காக இல்லாமல் நேரடி தமிழ்ப்படமான வெளியானதுதான் படத்தின் வெற்றிக்கான முதல் காரணம்.

விஜய்யின் ஹேர்ஸ்டைல், மேக்கப், காஸ்ட்யூம் என துப்பாக்கி படத்திற்கு முன்பு இருந்த விஜய்யின் வழக்கமான தோற்றத்தை மாற்றி புதுவிதமான விஜய்யை காட்டியிருந்தார்கள். இன்று வரை ரசிகர்களுக்கு இது ஃபேவரைட் லுக்காக இருக்கிறது.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணம்.

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும் ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங்கும் படத்தை டெக்னிக்கலாக வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச்செல்ல உதவியது.

விஜய்யின் பழைய தோற்றத்தை இந்தப் படம் மூலம் மாற்றியதோடு அவரது ஸ்டண்ட் ஸ்டைலையும் இந்தப் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் கேச்சா மாற்றியிருப்பார்.

விறுவிறுப்பான திரைக்கதையும் சுவாரஸ்யாமான காட்சிகளும் படத்தோடு ஆடியன்ஸை அதிகமாக ஒன்ற வைத்தது.

`யூடியூப் இன்ட்ரஸ்ட் டு சென்டிமென்ட் சட்டை வரை’ – `அண்ணாத்த’ ரஜினி பற்றிய 8 சுவாரஸ்யங்கள்!