`எல்லாம் சரியா நடக்கும்...’ விஜய் சேதுபதியின் 13 ரியல் லைஃப் பஞ்ச் டயலாக்குகள்!

பிரச்னைகள் வர்றது நல்லது. பெருசா வர்றது ரொம்ப நல்லது. அதை கையாளும்போது கட்ஃபீல் வரும். அதுதான் மரணத்தின் கடைசி வாசல்ல இருக்கும்போது அது உங்களோட மெமரி புக்ல இருக்கும். நல்லாருக்கும்.

நீங்க ஒருநாள் தனியாய்டுவீங்க. தனியா இருக்கும்போது ஞாபகங்கள் மட்டும்தான் துணையா இருக்கும். அதுக்கு அனுபவங்களைச் சேகரிக்கணும்.

சமுதாயத்துல சக மனுஷனோட சிரிச்சு, பேசி வாழ்றதுதான் வாழ்க்கை.

எல்லாருடைய வாழ்க்கைலயும் எல்லாருக்கும் ரொம்ப அழகான பக்கங்கள் இருக்கு. ரொம்ப அவஸ்தையான பக்கங்கள் இருக்கு. எல்லாருடைய வாழ்க்கைலயும் எல்லாரும் ஹீரோதான்.

எந்த ஸ்விட்ச தொட்டா லைட் எரியும்னு ஒரு கணக்கு இருக்கு. கடைசி வரைக்கும் சுவர மட்டுமே தொடக்கூடாது. ஸ்விட்சக் கண்டுபிடிச்சருனும். அதைக் கண்டுபிடிச்சுட்டா லைட் எரிஞ்சுரும். அதைத் தேடுற வேலைய கரெக்டா பண்ணனும்.

ஜெயிச்சவன்தான் ஹீரோனு இல்லை. இன்னைக்கு சமூகத்துல குறைந்த வருமானத்துல குழந்தைகளோட வாழ்ற அத்தனை அம்மா, அப்பாகிட்டயும் பெரிய ஹீரோயிஸம் இருக்கு.

நாமளா எதையும் நிரூபிக்கணும்னு அவசியமில்லை. ஸ்பெஷலா தெரியணும்னும் அவசியமில்லை. எல்லாம் சரியா நடக்கும். அதுவும் தானாவே நடக்கும்.

மரணத்தை மறந்துட்டு இஷ்டத்துக்கு ஆடுறாங்க. நம்புங்க, எல்லாரும் ஒருநாள் செத்துப் போறவங்கதான். இது தெரிஞ்சாலே போதும். அன்பு, கருணையெல்லாம் தானா வந்துடும்.

ஜெயிச்சாலும் தோத்தாலும் பாடம் கத்துக்கோங்க. அப்புறமும் தேடுங்க.. வேறொரு பாடம் கிடைக்கும். தேடுறதையும் பாடம் கத்துக்குறதையும் பழக்கமாகுற வரைக்கும் செஞ்சிட்டே இருங்க. அது பழக்கம்னு நீங்க நினைக்கும்போது வயசாயிடும். மைண்ட் ஃப்ரீ ஆயிடும். போதும்பா அப்டினு தோணும்.

மோட்டிவேஷன்னு ஒண்ணு இல்லவே இல்லை. அதை நம்புங்க. யாரு, என்ன பேசுனாலும் தனக்குள்ள எதுவும் இல்லாதவன் எதையும் ரிசீவ் பண்ணிக்க மாட்டான்.

நாம புத்திசாலினு நினைக்கிறவன்ல பலபேரு முட்டாள்தான். அவனை புத்திசாலினு நினைச்சிட்டு இருக்குறதுதான் நம்ம தப்பு.

 நாம இருக்குற இடமும் நம்மகிட்ட இருக்கக்கூடிய அதிகாரமும்தான் முக்கியம். நாம நல்லவனா, கெட்டவனா அப்டின்றது முக்கியம் இல்லை.

பிண்டத்தோட ஆசையை நிறைவேற்றுறதுதான் அண்டத்தோட வேலை.