`காலை உணவைத் தவிர்ப்பதால் என்னென்ன நோய்கள் ஏற்படும் தெரியுமா?

மனித உடலுக்கு உணவு என்பது மிகவும் முக்கியமானது. குறிப்பாக காலை உணவு. அதனைத் தவிர்க்கும்போது உடலில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழும். நோய்கள் உண்டாகும்.

காலை உணவைத் தவிர்ப்பதால் குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் சார்ந்த செயல்பாடுகள் குறையும். இதனால், சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

காலை உணவைத் தவிர்த்துவிட்டு அதற்கு அடுத்த வேளைகளில் அதிக உணவை எடுத்துக்கொள்வதால் உடல் பருமன் அதிகமாகும்.

காலை உணவைத் தவிர்ப்பதால் உடலில் சுரக்கும் ’டோபமைன்’,  `செரடோனின்’ ஹார்மோன்களின் அளவுகள் குறையும். இதனால் மனதில் உற்சாகம் ஏற்படுவதும் குறையும்.

காலை உணவைத் தவிர்ப்பதால் மூளைக்கு கிடைக்க வேண்டிய ஆற்றலில் குறைவு ஏற்படும். மறதி நோய் உருவாகும்.

காலை உணவைத் தவிர்ப்பதால் செரிமானக்கோளாறுகள் ஏற்படும். அல்சர் நோயும் ஏற்படும்.

காலை உணவைத் தவிர்ப்பதற்கான முக்கிய காரணமாக நீங்கள் நினைப்பது என்ன? கமெண்ட்ல சொல்லுங்க!