Arrow
Burst

உலகின் நீண்டதூர சொகுசுக் கப்பல் பயணம் - கங்கா விலாஸில் என்ன ஸ்பெஷல்?

முற்றிலுமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டிருக்கும் எம்.வி கங்காவிலாஸ் சொகுசுக் கப்பல் 18 அறைகளைக் கொண்டது. மொத்தம் 36 சுற்றுலாப் பயணிகள் ஒரு நேரத்தில் பயணிக்கலாம்.

உ.பியின் வாரணாசியில் புறப்பட்டு கிட்டத்தட்ட 50 சுற்றுலாத் தலங்களைக் கிட்டத்தட்ட 51 நாட்களில் பயணிக்க இருக்கிறது. 

அஸ்ஸாமின் தில்பரூக் நகரை மார்ச் 1-ம் தேதி சென்றடைய இருக்கிறது.

முதல் பயணித்தில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 32 சுற்றுலாப பயணிகள் பயணிக்க இருக்கிறார்கள்

 நட்சத்திர விடுதிகளில் இருக்கும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய கங்கா விலாஸ் சொகுசுக் கப்பலை, நகரும் நட்சத்திர விடுதி என்று வர்ணிக்கிறார்கள்.

40 பணியாளர்களுடன் பயணிக்கும் இந்தக் கப்பல் 62 மீட்டர் நீளமும் 12 மீ அகலமும் கொண்டது. 

ஸ்பா, சலூன் உள்ளிட்ட வசதிகளை உள்ளடக்கிய சொகுசுக் கப்பலில் ஒருநாள் பயணத்துக்கு ரூ.25,000-ரூ.30,000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 51 நாள் பயணத்துக்கு ஆகும் செலவு தோராயமாக ரூ.20 லட்சம். 

 பாட்னா, கொல்கத்தா, வங்கதேசத்தின் டாக்கா, அஸாமின் கௌகாத்தி உள்ளிட்ட நீர்வழிப்பாதைகளை உள்ளடக்கிய 50 சுற்றுலாத் தலங்கள் வழியாகப் பயணிக்க இருக்கிறது எம்.வி கங்கா விலாஸ்.

 பாட்னா, கொல்கத்தா, வங்கதேசத்தின் டாக்கா, அஸாமின் கௌகாத்தி உள்ளிட்ட நீர்வழிப்பாதைகளை உள்ளடக்கிய 50 சுற்றுலாத் தலங்கள் வழியாகப் பயணிக்க இருக்கிறது எம்.வி கங்கா விலாஸ்.