Whistle Theme: `பாட்டுப் பாடவா' முதல் `வலிமை' வரை... அசத்தல் `விசில்’ தீம்/பாடல்கள்!

ஓ.. ஓ.. கிக்கு ஏறுதே - படையப்பா படத்தில் இடம்பெற்றுள்ளப் பாடல் `ஓ.. ஓ.. கிக்கு ஏறுதே'. பார்ட்டி பாடல்களில் இன்றைக்கும் பலரது ஃபேவரைட் லிஸ்டில் இந்தப் பாடல் இருக்கும். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் பாடலின் தொடக்கமே விசில் தீம்தான். ரஜினியின் ஸ்டைல், இசை, காட்சி என எல்லாமே இந்தப் பாடலில் வேற லெவலில் இருக்கும்.

வாலி - அஜித் கரியரில் மிகவும் முக்கியமான படம் `வாலி’. எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்துக்கு தேவா இசையமைத்துள்ளார். ஹீரோயின் இன்ட்ரோவுக்கு விசில் தீமை தேவா பயன்படுத்தியிருப்பார்.

கபாலி - பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம், கபாலி. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தில் மைல்டாக ஒலிக்கும் விசில் தீம் செம மாஸாக இருக்கும்.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

உன்னாலே உன்னாலே - ஜீவா இயக்கத்தில் வினய் மற்றும் சதா நடிப்பில் வெளியான திரைப்படம், `உன்னாலே உன்னாலே’. இந்தப் படத்தில் ஹீரோயின் டிரான்ஃபர்மேஷன் காட்சி மற்றும் உன்னாலே உன்னாலே பாடல் ஆகியவற்றில் விசில் தீம் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

காலா - பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான `காலா’ படத்தில் மழையில் நடக்கும் சண்டைக் காட்சியில் விசில் தீம் பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். செம மாஸ் சீன்ல அது?!

கதகளி - பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடிப்பில் ஹிப்ஹாப் தமிழா இசையில் வெளியான திரைப்படம், `கதகளி’. இந்தப் படத்தில் இடம்பெற்ற விசில் பி.ஜி.எம் வெளிவந்த ஆண்டில் பலரது ரிங்டோனாக இருந்தது.

தெய்வத்திருமகள் - கண்கலங்க வைக்கிற ஒரு விசில் பி.ஜி.எம் என்றால் எது தெய்வத்திருமகள் படத்தில் இடம்பெற்ற அந்த பி.ஜி.எம்தான். குறிப்பாக நீதிமன்றத்தில் `Life is Beautiful' பி.ஜி.எம் ஒலிக்கும்போது கண் கலங்காதவர்கள் இருக்கவே முடியாது. விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

மின்னலே - கௌதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் மின்னலே. இந்தப் படத்தில் வரும் அழகிய தீயே பாடலின் ஒப்பனிங் மியூசிக்கே விசில்தான். ஒன்சைட் லவ் பண்றவங்களுக்கு இந்த மியூசிக் அல்லது இந்தப் பாடலை லவ் கீதமாகவே அறிவித்துவிடலாம்.

அயன் - கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான திரைப்படம் அயன். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள விழி மூடி யோசித்தால் பாடலின் இடையில் வரும் அந்த விசில் பி.ஜி.எம்-ஐ மறக்க முடியுமா?  

தெறி - விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான திரைப்படம். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் பி.ஜி.எம்-ல் வரும் விசில் மியூசிக் வேற லெவலில் இருக்கும். தளபதி ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் தீமில் இந்த தீம்க்கு எப்போதும் இடம் உண்டு.

வலிமை - இந்த லிஸ்ட்ல கடைசியா சேர்ந்தாலும் இன்றைக்கு பலரது ரிங்டோனாக மாறியுள்ளது, வலிமை விசில் தீம். யுவனின் இசையில் அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்துக்கு கூடுதல் பலம் இந்த தீம் மியூசிக். லெட்ஸ் வெயிட் அண்ட் சீ... வேற என்னலாம் இந்தப் படத்துல மேஜிக் இருக்குனு பார்க்கலாம்!