பசங்க வாழ்க்கைல கேர்ள் பெஸ்ட்டி ஏன் முக்கியம்? கொஞ்சம் சீரியஸ் ரீசன்ஸ்!

உங்களை அறியாமலேயே பல வழிகள்ல உங்களை சரியான பாதையில் அவங்க உங்க கைப்புடிச்சிக் கூட்டிட்டுபோய்ருப்பாங்க. அட்லீஸ்ட் இதுதான் சரியான பாதைனாவது காட்டுவாங்க.

எதாவது ஒரு இடத்துல எமோஷனலா நீங்க முடிவு எடுக்கவேண்டிய சூழல் இருக்கும். அப்பவும் உங்களுக்கு அவங்க ரொம்பவே ஹெல்ஃபுல்லா இருப்பாங்க.

உங்க வாழ்க்கைல எதாவது ஒரு இடத்துல ஸ்டக் ஆகி நிப்பீங்க. அந்த நேரத்துலயும் அவங்க உங்களோட அடுத்த ஸ்டெப்பை எப்படி எடுத்து வைக்கணும்னு மோட்டிவேட் பண்ணுவாங்க.

நீங்க எந்த ஷர்ட் போட்டா நல்லாருக்கும், எந்த ஷூ போட்டா நல்லாருக்கும்னு எல்லாமே செலக்ட் பண்ணி தருவாங்க. உங்க டிரெஸ்ஸிங் சென்ஸ் ரொம்ப கேவலமா இருந்தா, அப்படியே உங்களை மாத்திடுவாங்க.

இன்னைக்கு இருக்குற பெரிய பிரச்னை, நாம பொலம்புறதைக் கேக்க ஆள் இல்லைன்றதுதான். ஆனால், கேர்ள் பெஸ்டி நல்ல லிஸனரா இருப்பாங்க.

பெரும்பாகும் காதல் பிரச்னைகள் வரும். அதையும் அவங்கக்கிட்ட பொலம்புனா, சிம்பிளான ஒரு சொலியூஷனை சொல்லிட்டு நம்மள கூல் பண்ணிடுவாங்க.

நம்ம சீக்ரெட்னு ஒரு விஷயம் அவங்கக்கிட்ட சொன்னா. கண்டிப்பா யார்க்கிட்டயும் சொல்லலாம் மாட்டாங்க. நீங்க சொல்ற சீக்ரெட்ஸை வைச்சு உங்கள ஜட்ஜ் பண்ணவும் மாட்டாங்க.

உங்களோட ஃபீலிங்ஸ்ல பங்கெடுத்துப்பாங்க. நீங்க சந்தோஷமா இருந்தா சேர்ந்து சிரிப்பாங்க, அழுதா தோள் கொடுப்பாங்க, கண்ணீரைத் துடைப்பாங்க.

கேர்ள் பெஸ்டிய ஒரு கிரிஞ்சான கேரக்டரா சமூகத்துல இப்போலாம் பார்க்குறாங்க. ஆனால், அந்த கேரக்டர் நம்ம வாழ்க்கையை ரொம்பவே அழகான ஒண்ணா மாத்துவாங்க.

உங்களோட கேர்ள் பெஸ்ட்டிய கமெண்ட்ல டேக் பண்ணி... அவங்க உங்க வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம்னு சொல்லுங்க!